பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.







லாங் பெலோ


குழந்தைகள்

I

குழந்தைகளே! என்னிடம் வாருங்கள், !

உங்கள் விளையாட்டைப் பார்க்கப் பார்க்க,

என்னைக் கலக்கிய சங்கைகள் எல்லாம்

மாயமாய் மறைந்து விடுகின்றன !

II

ஞாயிறு நோக்கும் சாளரம் திறமின் !

தூக்கணங்கள் பாடும், ஓடைகள் ஒளிரும்.

III

பானுவும் பட்சிகளும் உங்கள் இதயத்திலே :

ஒடையின் நீரோட்டம் உங்கள் கருத்திலே !

என் இதயத்திலோ, இலையுதிர் காற்று -

பனியும் விழ ஆரம்பம் !

11