பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



IV

குழந்தைகள் மட்டும் இல்லாவிடில்,

உலகத்தால் நமக்கு என்ன பயன் ?

முன்னுள்ள இருளினும் பின்னுள்ள பாலையை

அதிகமாக அஞ்சுவோம்.

V

இனிய மென் சாறு,

ஒளியும் காற்றும் பருகி

மரமாய் இறுகும்.

அடி மரத்துக்குக் கிடையாத

ஒளியும் காற்றும்

இலைகளால் கிடைக்கும்.

அரனியத்துக்கு இலைகள் - அவைபோல்

அவனிக்குக் குழந்தைகள் !

VI

குழந்தைகளே ! என்னிடம் வாருங்கள் !

உங்கள் ஒளியுலகில் உலவும்

பட்சியும் காற்றும் பாடுவதை

என் செவியில் கூறுங்கள் !

VII

உங்கள் மெய் தீண்டும் இன்பம்,

உங்கள் பார்வையின் ஆனந்தம்,

இவை எங்கே ?


19