பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.






டெனிஸன்


வாழ்ந்துவிட்டேன் !

I

அளவிலா இனிமை எது? அதை

என்வாழ்வு அடையு முன்பே,

பூமி பிளவாமல் என்னைத் தாங்கி நிற்க !

பின்னர் வருவது வரட்டும் !

நான் பைத்தியமே கொண்டால் என்ன ? -

வாழ வேண்டிய நாள் வாழ்ந்தவ ளாவேன்!

II

என்னைக் காதலிக்க ஒருவர் உளர்

என்று உறுதியாக நான் அறியுமுன்,

இனிய வானம் இருளா திருக்குமாக !

பின்னர் வருவது வரட்டும் !

அப்பொழுது துக்கம் தோய்ந்த வாழ்வில்

வாழவேண்டிய நாள் வாழ்ந்தவ ளாவேன் !


26