பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

III

எழுந்து இடத்தைச் சுத்தஞ் செய்யுங்கள் !

பெரிய பானையை அடுப்பில் வையுங்கள் !

நம் சிறு கேட்டுக்குப் பொத்தான் சட்டையும்,

ஜாக்குக்குப் பட்டுச் சொக்காயும் போடுங்கள்

அவர்கள் செருப்புக் கறுப்புக் கனியட்டும் !

அவர்கள் மேல்ஜோடு பனிபோல்,வெண்மை வீசட்டும் !

அனைத்தும் அவருக்கு ஆனந்தம் அளிக்கவே !

அவர் வெகுநாள் கழித்துவருகிறார் அல்லவா?

IV

எவ்வளவு மெய்யான நெஞ்சு !

எவ்வளவு மிருதுவான பேச்சு !

அவர் மூச்சுக்கூடப் புதுக் காற்றுப் போலே.

அவர் படியேறி வரும்போது -

வெறும் பாதந்தானே - ஆனால்

எவ்வளவு இனிய இசை ! -

அவர் முகத்தைத் திரும்பவும் காண்பேனா ?

அவர் பேசுவதை மீண்டும் கேட்பேனா?

அவரை வரவேற்கப் போகிறேன் -

அந்த நினைவில் என் தலை சுழல்கிறதே !

V

கோலின் ஆனந்தமாய் இருந்தால் போதும்,

எனக்கு வேறோன்றும் தேவையில்லை !


28