பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் விண்ணும்

I

தேவலோகத்தில் சண்டையில்லை, சச்சரவில்லை;
கலப்பற்ற உண்மையைக் காணலாம்,
கருதியபடி காரியம் சாதிக்கலாம்:
ஆனால், இந்த மனித வாழ்வே இனிமை !
இதுவே இனிமை, இதுவே இனிமை !
இந்த உலகக் காற்றே எனக்கு இன்பம் !
விண்ணும் வேண்டாம், விண் மீன்களும் வேண்டாம்,
எனக்குத் தெரிந்த தெல்லாம்
இந்த அன்பு நிறைந்த வையமே !

II


'இந்த உலகில் எல்லாம் நிழலே ;
அந்த உலகில்தான் உண்மை என்கிறீர்.
ஆனால், அந்தச் சூனியத்தைக்கண்டு அஞ்சுகிறேன் !
அஞ்சி,குழந்தையைப் போல் அன்பில் ஒளிகிறேன்!
தேவர்கள் அன்பு செய்வதென்ன, காட்டுவீர்!
கேவலம் நான் ஒரு பலமற்ற மானுடன் ;
அதனால் அதை நீர் காட்டும் வரையிலும்,
மனிதரே என் துணை, அவரைவிட்டு அகலேன் !

III


'காதல் மாறும், காதல்மொழிகள் தடுமாறும்,
அற்ப ஆசைகளை அகற்றி எறிக !
மனம் விண்ணை நாடட்டும் !
அங்கே ஆண் பெண் இல்லை, தேவதைகளே உண்டு.

41