பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோர்வில்லாக் குரல் - மொழியில்லா இசை, என்கிறீர்.
ஆனால், என் இதயமோ - என் அன்பன்,
இறந்துபோன நண்பனின் இன்குரலை
ஞாபகத்திற் கொண்டு திருப்தியுறும்.

IV


'இப்பொழுதுள்ளவை அழிந்து போம்;
அழியாதவை பெற இவற்றை இழப்பாய்;
இந்த உலகில் எதற்காக வாழ்கிறோம் -
அந்த அழகுப் பொருள்கள் அழியும், என்கிறீர்.
அழகுப் பொருள்கள் அநித்தியமே யாயினும் -
ஆனால், ஐயோ அதனால்தானே,
இறந்துபடும் என்பதற்காகத்தானே,
அவற்றை இறுகப் பிடித்துளேன்!

கோரி