பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்

‘புகழ்’ மங்கை, அடிபணிந்து காதல் இரப்பார்க்கு

முகம் கோணுவாள்.

அலட்சியமா யிருக்கும் இளைஞனிடம் அவளாகவே

தன்னை ஒப்புவிப்பாள்.

அவளை எண்ணாதவரிடம் அணுகி அவளாகக்

காதல் வேண்டி நிற்பாள்.

அவளின்றித் திருப்தியுற அறியாதாரிடம்

அவள் பேசமாட்டாள்.

தன்னைப் பற்றிப் பேசுவோர் தன்னை நிந்திப்பதாக

எண்ணுவாள்.

அவளிடம் காதல்நோய் கொண்ட கவிஞர்காள்!

அவள் எள்ளினால் நீங்களும் எள்ளிவிடுங்கள் !

அவளிடம் காதல்-பித்துக்கொண்ட கலைஞர்காள் !

அவளிடம் தலைவணங்கி விடைபெற்றுக்
கொள்ளுங்கள்

அவள் இஷ்டப்பட்டால், அவள் தானாக

உங்களைப் பின்தொடர்வாள்!

—————