பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரு நண்பர்கள்

உயிரே! நீ யார், உன் தன்மை யென்ன, அறியேன்.
ஆனால் நீயும் நானும் ஒருகால் பிரியவேண்டும்
                            என்பதை அறிவேன் !
நாம் இருவரும் சங்தித்தோமே,
அது எப்பொழுது, எப்படி, எங்கே ?
அதுவும் இன்றுவரை எனக்கு மர்மம்தான்.
உயிரே! வெகுநாள் ஒன்றாய் இருந்துவிட்டோம்,
வசந்த காலத்தும் சரி, வாடைக்காலத்தும் சரி.
நண்பர்களிடை அன்பு இருந்து விட்டால்
அவர்கள் பிரிவது கடினம், ஐயமில்லை !
கண்ணீர் பெருகும், நெஞ்சு பொருமும்.
      என்னிடம் சொல்லாமல் எனக்குத்
        தெரியாமல் போய்விடு -
எந்த நேரமாயினும் சரி, உன் இஷ்டம் !
‘போய்வருகிறேன்!’ என்று விடைபெறவேண்டாம்;
இதனிலும் ஒளிமிகுந்த உலகில் என்னைச்
‘சுகமா?’ என்று விசாரித்தால் போதும்.

பார்பால்ட்

46