பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாடிய ரோஜா

I

ஓ வாடிய ரோஜா மலரே !
உன் பெயரைக் கூற யார் துணிவார் ?
உன் ரோஸ் நிறம் எங்கே? மென்மை எங்கே?
உன் இனிமை எங்கே?
வெளுத்து விட்டாய் !
கோதுமை அரிதாள்போல் உலர்ந்துவிட்டாய்!
மேஜையில் வைத்து ஏழு வருஷங்கள் ஆய் விட்டனவே!
உன் பெருமைகளே உனக்கு நாணம் தரும் I

II


வேலியின் முட்களுக்கு இடையில்
உன்னை அணைந்து
நாள் முழுதும் நிற்கும் நறுமணத்தைக்
கவர்ந்து செல்லும் தென்றல் -
இன்று இனிமை யில்லை என்று ஏகிவிடும்.

III


ஒளி மலர்ந்ததா, மலர் ஒளிர்ந்ததா
என்று மயங்குமாறு உன் அழகிய உடலில்
தன் அழகைச் சேர்க்கும் கதிரவன் -
இன்று உனக்கு ஒளி தராது செல்வான்.

52