பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதிர்ஷ்டம் எப்பொழுது ?

I

ஒருவனுக்கு அவன் சவாரி செய்ய
ஒரு குதிரை கொடு ;
ஒருவனுக்கு அவன் கடலில் போக
ஒரு படகு கொடு ;
கரையிலும் சரி, கடலிலும் சரி.
பதவியும், பணமும், சுகமும், ஆற்றலும்
அவனுக்குக் குறைவு படா.

II


ஒருவனுக்கு அவன் புகை குடிக்க
ஒரு குழாய் கொடு ;
ஒருவனுக்கு அவன் படிக்க
ஒரு நூல் கொடு -
வீட்டில் ஒன்றும் இல்லாவிடினும்
சாந்தமான சந்தோஷத்தால்
அவன் வீடு ஒளிநிறைந் திருக்கும்.

III


ஒருவனுக்கு அவன் காதல் செய்ய
ஒரு யுவதி கொடு -
என் காதலியை நான் காதலிப்பது போல்
அவனும் காதல் செய்ய.
அதிர்ஷ்டம் அவன் நாடியில் ஒடும்,
வீட்டிலும் சரி, வெளியிலும் சரி.

ஜேம்ஸ் தாம்ஸன்


56