பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

II


துக்கமேன்? துயரமேன் ? அழுகையேன் ?
என்று குழந்தைகளைக் கேட்கின்றீர்களோ?
ஆம், வயோதிகன் வருவதை அஞ்சி அழலாம்;
ஆம், வயதான மரம் இலையின்றி நிற்கலாம்;
ஆம், ஆண்டு முதிர்ந்து பனியில் முடியலாம்;
ஆம், புண் பழுத்துப் புரை யோடலாம் ;
ஆம், பழகிய நம்பிக்கை இழந்து வாடலாம்;
ஆனால், ஐயோ! இளங் குழந்தைகள்
சந்தோஷம் நிறைந்த நமது தாய்நாட்டில்
தாயர் மார்பில் சாய்ந்து விழுந்து
கண்கள் சிவக்க அழுகின்றனரே!
காரணம் என்ன என்று கேட்பீரோ ?

III


வெளுத்த முகங்கள், ஒட்டிய கன்னங்கள்,
துன்பம் நிறைந்த கண்கள் !
பெரியவர்க்குப் பெருகும் துக்கம்
குழங்தைகள் கன்னங்களைக் குழிக்குமோ?
‘எங்கள் இளம் பாதங்கள் எவ்வளவு பலவீனம் !
காலைத் துாக்கவில்லை, அதற்குள் களைப்பு -
கல்லறையின் ஓய்வும் கண்ணுக்குத் தெரியவில்லையே!
அழுவதேன் என்று குழந்தைகளைக் கேட்காதீர்;
வயோதிகரைக் கேளுங்கள் வெளியே குளிர்,
ஆனால் ஐயோ ! கல்லறைகள் வயோதிகர்க்கே !

59