பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

IV


'அகால மரணம் அடையலாம், உண்மையே.
கழிந்த ஆண்டில் தங்கை மாண்டாள்;
அவள் சவக்குழியைப் பார்த்தோம்;
அதில் அவள் வேலை செய்ய வேண்டாம்;
அங்கே ஒரே தூக்கமாய்த் தூங்கலாம்;
விடிந்துவிட்டது என்று எழுப்புவா ரில்லை;
பகல் காயட்டும், பனி விழட்டும்,
கல்லறையில் காதுவைத்துக் கேளுங்கள்!
சிறு தங்கை ஒருபொழுதும் அழுவதில்லை;
அவள் முகத்தை நாம் பார்த்தால்
அதை நாம் அறியமாட்டோம், நிச்சயம்.
முன்னில்லாத முறுவல் முளைத்துவிட்டதே!
கோவில் மணி தாலாட்டக் குதூகலமே!
கல்லறையில் கணப்பொழுதும் கவலையில்லை
அகால மரணம் அடையப் பெற்றால்
அது எங்களுக்கு எப்பொழுதும் நல்லதே.

V


நாங்கள் களைத்துவிட்டதே காரணம்,
ஓடமுடியாது, சாட முடியாது,
என்றேனும் நாங்கள் புல் தரை விரும்பினால்
அதில் விழுந்து உறங்கவே.
குனிந்து குனிந்து முழங்கால் நடுங்கும்,
நடக்க முயன்றால் குப்புற விழுவோம்.


60