பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இன்னும் ஒரு துரதிர்ஷ்டசாலி

I


இன்னுமோர் அதிர்ஷ்டங் கெட்டவள் -
வாழ்வில் சோர்வுற்று,
முன்பின் யோசிக்க முடியாமல்,
மரணத்தைத் தேடிவிட்டாள்!

II


அவளை மெதுவாய் எடுங்கள்!
அவளைக் கவனமாய்த் தூக்குங்கள்!
அவ்வளவு மெல்லிய சரீரம்!
அவ்வளவு இளமை! அவ்வளவு அழகு!

III


அவள் ஆடையைப் பாருங்கள்!
உடம்போடு ஒட்டிவிட்டது!
ஜலமோ சொட்டிக் கொண்டிருக்கிறது!
அவளை உடனே தூக்குங்கள்!
அருவருக்க வேண்டாம், அன்பாய் எடுங்கள்!

IV


இகழ்ச்சியாய்த் தொடாதீர்!
துக்கத்தோடு-இளகிய மனத்தோடு நினையுங்கள்
அவள் தோஷங்களைப் பற்றி யல்ல -
இப்பொழுது மீதியாயுள்ள தெல்லாம்
அவள் மாசற்ற வெண்மையே யாகும்!

75