பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

V


காரியத்தை அவசரப்பட்டுத் தான் -
கடமையைக் கருதாமல்தான் செய்துவிட்டாள்
ஆயினும் ஆழ்ந்து ஆராய வேண்டாம்!
இனி எந்த இழிவும் அவளைத் தீண்டாது!
அந்தகன் அழகா யுள்ளதை மட்டும்
அவளிடம் விட்டு வைத்துள்ளான்.

V


எத்தனை தவறுகள் இழைத்திருப்பினும் -
அவளும் பெண்குலம் தானே?
ஐயோ! ஒட்டிக்கொண்ட
அந்த உதடுகளைத் துடையுங்கள்!

VI


அவிழ்த்துவிட்ட அவள் குழலை முடியுங்கள்,
அந்த அழகு நிறைந்த அளகபாரத்தை.
அவள் வீடு எதுவோ என்று
‘ஆச்சரியமே’ மூக்கில் விரல் வைத்து நிற்கும்!

VII


அவள் தந்தை யார்?
அவள் தாய் யார்?
அவளுக்குச் சகோதரி உண்டா?
அவளுக்குச் சகோதரன் உண்டா?
அல்லது அனைவரிலும் அன்பான
அதிக நெருங்கிய ஒருவர் உண்டா?

76