பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

IX


அந்தோ! அவனியில் அபூர்வமோ
இயேசு இயம்பிய இரக்கச் சித்தம்?
ஐயோ! எவ்வளவு பரிதாபம்!
ஊர் நிறைய வீடுகள்,
ஆயினும் அவளுக்கு இடம் இல்லையே!

Χ


சகோதர வாஞ்சை - தாய் தந்தை வாஞ்சை,
அங்த உணர்ச்சி மாறி விட்டதே!
அன்பு - கொடிய சான்று கண்டு
அதன் பீடத்தினின்று வீழ்ந்துவிட்டதே!
கடவுளின் கருணைகூடக் கல்லாய்விட்டதே!

XI


நதியின் இருமருங்கு வீடுகளின்
விளக்கு வெளிச்சம் வெகு துாரம்வரை
ஜன்னல் வழியே ஜலத்தில் சலிப்ப,
அவள், ஐயோ, அந்த இருளில் -
வீடின்றி, வாசலின்றி -
தனியாக ஆச்சரியத்தோடு நின்றாள்.

XII


மார்ச் மாதத்துக் காற்று.
கடுங் குளிர் உடம்பைத் துளைக்கும்,
அன்றிரவு அந்தக் காற்று
அவளை நடுக்கிவிட்டது.

77