பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆனால் அந்தோ, அவள் நின்ற பாலமோ -
அதன்கீழ் ஓடும் ஆற்று நீரோ -
அவள் அணுவளவும் அஞ்சவில்லை.
வாழ்வில் அவள் அனுபவம்
மனதைக் குழப்பிவிட்டது, மூளையைக் கலக்கி விட்டது.
மரணத்துக்குப் பின் மர்மம் -
அதை அறிய ஆவல், ஆனந்தம் -
இந்த உலகுக்கு வெளியே
இந்த உடலை எங்காயினுஞ் சரி
எறிந்து விட்டால் போதும்.

ΧΙΙI



அதோ குதித்துவிட்டாள்! அமிழ்ந்துவிட்டாள்!
ஆற்று நீர் குளிரால் நடுக்கி விடுமே?
அலைகள் அலங்கோலப் படுத்திவிடுமே!
ஆனால் அதைச் சிந்திப்பது ஏது?
அறநெறி வழுவிய ஆண் உலகமே!
அந்தக் காட்சியைச் சித்திரித்துப் பார்!
உன்னால் முடியுமானால்,
நீயும் அதில் குளிப்பாய், நீயும் அதைக் குடிப்பாய்!

XIV



அவளை மெதுவாய் எடுங்கள் !
அவளைக் கவனமாய்த் தூக்குங்கள்!
அவ்வளவு மெல்லிய சரீரம் !
அவ்வளவு இளமை! அவ்வளவு அழகு!

78