பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

III

எங்களைச் சுட்டு வீழ்த்துவீர்களோ?

சுட்டால் உயிரைக் காணமாட்டீர்களே!

உறங்கிக் கிடக்கும் சாவையல்லவோ எழுப்புவீர்கள்!

நீங்கள் விரும்புவது போல அச்சத்தை எழுப்ப முடியாதே!

IV

மூடர்களே! உங்கள் அக்கிரமம் கண்டு சிரிக்கிறோம்!

இனிமேல் எங்களிடம் உங்கள் எண்ணம் பலிக்காது!

V

எங்கள் நகையின் பலம் அறிவீர்களா?

உங்கள் ராஜ்யங்கள் உறுதியற்றவை என்று உணர்த்தும்;

‘இறந்தோர் நகை’ - வாழ்வோர் மத்தியில் எழுந்து

அற்புதங்கள் ஆக்கும் ஆற்றலாகும், அறிவீர்!

VI

ஜாக்கிரதை! இறங்தோர் நகை என்று எண்ணற்க

இறுமாப்புக் கொண்ட் ராஜ்யங்களை

எமனுலகு அனுப்ப இயலும்!

என்ன சொல்லுகிறீர்? இஷ்டம் என்ன?

______

VI