பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

сrape

115

credence


 crape (n) - கறுப்புப் பட்டுத் துணிவகை.
crapulent (a)- உடல் நலம் குறையும் (அதிகம் உண்ணல்,குடித்தல்). Crapulence (n) - உடல் நலம் குறைதல்.
crash (v) - உடைந்து சிதறு, மோது, சட்டெனக் கீழே விழு. (n)- உடைந்து சிதறல், மோதும் ஒலி. Crash (a) - விரைந்த முடிவு நோக்கிச் செய்யும், கடுமுனைப்பான. Crashing bore- அலுப்பு தட்டவைக்கும் ஆள்,அறுக்கும் ஆள்.
Crash barrier - கூட்டத்தைத் தடுத்து நிறுத்தும் தடை. Crash dive - சட்டெனக் குட்டிக்கரணம் அடித்தல் (வானூர்தி, நீர்மூழ்கிக் கப்பல்). crash helmet - தலைக் கவசம்.
crash land (V) - மோதி இறங்கு(வானக்கலம், வான வெளிக்கலம் ). Crash landing (n) - மோதி இறங்கல் (வானக்கலம், வான வெளிக் கலம்).ஒ. soft land
Crass (a) - முழு
crate (n)- ஏற்றியனுப்பும் பெருங்கலம். (v) - அத்தகையக் கலத்தில் வை.
Crater (n)- எரிமலை வாய். Crater lake - எரிமலைவாய் ஏரி.
cravat(n)- கழுத்துப்பட்டி.
crave (v) - கெஞ்சிக் கேள், மிகுதியாக விரும்பு. Craving (n) - மிகுவிருப்பம்.
craven (a) - கோழைத் தனமுள்ளவர்.

crawl(v)- நகர், ஊர்ந்துசெல் (n)தவழ்தல், நகர்தல். crawler (n) - பேன்.
crayon (n) - வண்ணக்கோல்,சுண்ணக் கோல்.
craze (n) - மீயார்வம், கிறுக்கு. (V) - கிறுக்காக்கு.Crazy (a) - அறிவுமாறாட்டமுள்ள. Crazed (a) - அறிவுகெட்ட.Craziness(ո).
creak (v) - கிரீச்சென்று ஒலிஎழுப்பு. creak (n) - கிரீச் சொலி.
cream (n) - பால்ஏடு, சிறந்த பகுதி, (v) - சத்துப் பகுதியைப் பிரித்தெடு, பசையாகக்கல. (a) - மஞ்சள் கலந்த வெள்ளை. creamer (n) - பாலேடு பிரிப்பி. creamery (n) - பாலேட்டகம்.
crease (n) - மடிப்புக்கோடு. (v)மடித்து அடையாளம் செய்.
create (v) - உருவாக்கு, படை,பிறப்பி. creation (n) - படைப்பு. creative - படைப்பு சார். creative criticism - ஆக்கந்தரும் திறனாய்வு. Creator (n) - படைப்போன், கடவுள். Creature (n)- படைப்புயிர், கைப்பாவை.
creche (n)-குழந்தைக்காப்பகம்.
credence (n) -நம்பிக்கை.Credentials (n) - நற்சான்றுகள்.Credible (a) - நம்பத்தகுந்த(X incredible) credibility (n) - நம்பிக்கை, Credibly (adv).