பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dawn

127

deaf



dawn (v) - விடி, தோன்று, உள்ளத்தில் விளக்கமாகு. (n) - விடியல், முதல் தோற்றம்.
day (n) - நாள், பகல், வாழ்நாள் daily - நாள்தோறும்.day (n) - நாள், பகல், வாழ்நாள் daily - நாள்தோறும்.day-book - நாளேடு. day-break - விடியற்காலை, day-dream - பகற்கனவு.day-light - பகல் ஒளி,day-light robbery - பகற்கொள்ளை.day-room - பகலறை (உணவு விடுதி) day-time -பகல் நேரம். day-School- பகற்பொழுது பள்ளி. day-today (a). ஒவ்வொரு நாளும்
daze (v) - திகைக்கச் செய், கண் கூசச் செய், குழம்பச் செய் dazed (a)- திகைக்கவைக்கும், குழம்பச் செய்யும். dazzle (v) - கண்கூசச் செய் (ஒளி), திகைக்கவை (n) - ஒளிர்வு, பகட்டு dazzling (a) - பகட்டான.
deacon (n) - திருச்சபைக் கோயில் அலுவலர். (ஆண்) deaconess (n) - திருச்சபைக் கோயில் பெண் அலுவலர்.
dead (a)- இறந்த, உயிரற்ற, அசைவற்ற, மந்தமான, பயனற்ற, மரமரப்புள்ள, முழுதுமான, விளையாட்டுப் பரப்புக்குப் புறத்தே.dead (n) - the dead; இறந்தவர்.


dead beat (n) - வாழ்க்கை வெறுப்பாளர். dead heat (n) - ஒரே நேர (இருவர்) வெற்றி முடிவு.
dead-pan (a)- வெளிப்பாடு இல்லாத. (முகத் தோற்றம்)
dead-weight - வெற்றெடை
deaden (v) - ஆற்றலைக் குறை.
dead-letter (n) - சரியான முகவரியற்ற கடிதம், dead letter office - முகவரியற்ற கடித அலுவலகம்.
deadline (n)- முடிக்க வேண்டியகாலம்.
dead-lock (n)- முட்டுக்கட்டை.
deadly (a) - இறப்பு உண்டாக்கக்கூடிய. குறியாக உள்ள,வெறுப்புள்ள, மிகக் கடுமையான.
deadly (adv) - இறந்தது போல,மிகக் கடுமையான. deadliness (n).
deaf (a) - செவிடான, கேளாத. deaf(n)- the deaf-செவிடர். deafness (n) - செவிட்டுத் தன்மை.deaf-aid - செவிடர் கேள் கருவி.deaf-and-dumb - கேட்கவும் பேசவும் இயலாத, deaf-mute - செவிடாகவும் ஊமையாகவும் உள்ள ஆள். deafen (v) - செவிடாகச் செய், கேளாமல் இருக்கச் செய், deafening (a) - மிக உரத்த.deafeningly (adv). deal-wood - கள்ளி மரம்.