பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

delirium

135

demiurge



delirium (n) - தன் நினைவற்ற பிதற்றல். delirium tremens - குடிப் பிதற்றல்.
deliver (V) - விடுவி,ஒப்படை,குழந்தைபெறு, சொற்பொழிவாற்று, deliverance (n)- விடுதலை, காப்பாற்றுதல். delivery (n) ஒப்படைப்பு, பட்டு வாடா, மீட்டல், பிள்ளைப் பேறு, பேச்சு நிகழ்வு, பேசும் பாங்கு.deliverer (n) - ஒப்படைப்பவர், மீட்பவர்.
dell (n) - பள்ளத்தாக்கு.
delouse (v) - பேன் நீக்கு.
Delphian, Delphic (a)- டெல்பி கோயில் சார், வருங்குறிகூறும், ஈரடியான, இருபொருள் உள்ள.
delta (n) - டெல்டா: கிரேக்க நெடுங் கணக்கின் நான்காம் எழுத்து, ஆற்றுக் கழிமுகம். deltoid(a)- முக்கோண வடிவமுள்ள .
delude (v) - மயக்கு ஏமாற்று. delusion (n) - ஏமாற்றல்,மயக்கல். dėlusive (a) - ஏமாற்றும், மயக்கும்.
deluge (n) - பெருவெள்ளம், பெருமழை, ஊழி வெள்ள எழுச்சி. (v) பெருவெள்ளமாக்கு.
deluxe (a) - பேருயர், சிறந்த, deluxe edition - பேருயர் பதிப்பு.
delve (v) - தோண்டு, தேடு,செய்தியறி, ஆராய்.
demagnetize (v)- காந்தம் நீக்கு.demagnetization (n) - காந்தம் நீக்கல்.


demagogue (n) - மக்கள் தூண்டு தலைவர். demagogic (a) - மக்களைத் தூண்டும். demogogy (n) - மக்களைத் தூண்டுங்கலை,
demand(v)-உரிமையைக்கேள், உரிமையுடன் கேள், வேண்டு (n) - கோரிக்கை, தேவை.
demarcation (n) - எல்லை குறித்தல்.demarcate (a)-எல்லை குறி.
demean (v) -இழிவு படுத்து,பெருமை குறை.demeaning (a)- இழிவுபடுத்தும்.
demeanour (n) - நடத்தை.
demented (a) - கிறுக்கான.dementia (n) - கிறுக்கு. dementia praecox உளச் சிதைவு (மனநோய்).
demerit (n) -குறை,குற்றம்.
demesne (n) - தன்னுரிமை நிலம், தனியுரிமை நிலம்.
demi.god (n) - தெய்வத்தோடு ஒத்தவர், தெய்வ நிலையாளர்.
demilitarize (v) - போர்ப்படை நீக்கு. demilitarization (n) - போர்ப்படை நீக்கல்.
demi-monde (n) - இழிநிலை மாதர்.
demi-official - நேர்முக,அரைகுறை அலுவல் சார்.demi-official letter- நேர்முகக் கடிதம்.
demise (n) - இறப்பு, தோல்வி,முடிவு.
demist (v) - பனிப்படலம் நீக்கு. demister (n) - பனிப்படலம் நீக்கி.
demiurge (n)- கடவுள்,படைப்பு முதல்வர்.