பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

exempt

189

exile


 exempt(V)- விதிவிலக்களி.(a)-நீங்கலாக, வரிக்குட்படாத, exemption (n) -விதிவிலக்கு.
exercise (n) - பயிற்சி.(V) -பயிற்சி செய்.
exert (v) முயற்சி செய், ஆற்றலைப் பயன் படுத்து.exertion (n) முயற்சிசெய்தல்,
exeunt (v) - வெளிப் போதல்(நாடக அரங்கு).
ex gratia (a) -கருனைசார். ex gratia grant - கருணைக் கொடை.ex gratia payment - கருணைத் தொகையளிப்பு.
exhale - மூச்சை வெளிவிடு, வளியை வெளியேற்று. (x in hale) exhalation (n) - மூச்சை வெளிவிடுதல். exhaust (V) - வெளியேற்று,களைப்புறு, முழுதும் பயன்படுத்து. exhausted (a)- மிகவும் களைப்பான.
exhaust (n) - வெளியேற்றல் exhaust pipe - வெளியேறுங் குழாய் exhaust valve - வெளியேற்றுந் தடுக்கிதழ். exhaustion (n) - மிகுகளைப்பு முழுதும் பயன்படுத்தல்
exhaustive (a) - முழுமையான அற.exhaustive search -முழுத் தேடுகை.exhaustively(adv).

13

exhibit (v) - பிறர் அறியக் காட்டு, திறமையை வெளிப்படுத்து. exhibit (n)- காட்சிப் பொருள். exhibitor (n) - பொருட் காட்சியாளர் exhibition (n)- பொருட்காட்சி, கண்காட்சி, வெளிக்காடல், செய்து காட்டல் (திறன்) exhibitioner (n) - உதவித் தொகை வாங்கும் மாணவர்.
exhibitionism (n) - கவர்ச்சி காட்டல், பாலுறுப்புகளை பொது இடத்தில் காட்டல் exhibitionist (n) - கவர்ச்சியாளர், பாலுறுப்புகளைக் காட்டுபவர்.
exhilarate (v) - பெருமகிழ்ச்சியுடன் இரு. exhilarating (a) - பெருமகிழ்ச்சியுண்டாக்கும் exhilaration (n) - பெருமகிழ்ச்சி, பேருவகை.
exhort (v) - அறிவுரைகூறு, வற்புறுத்து. exhortation (n) - அறிவுரை, வேண்டுகோள்.
exhume(V)- புதைத்த உடலை அகழ்ந்தெடு. exhumation (n) - புதைத்த உடலை அகழ்ந்தெடுத்தல்.
exigency (n)- நெருக்கடி, விரைவு
exigent (a) - உடன் நடவடிக்கை வேண்டும், மிகுதியாகக் கேட்கும்.
exiguous (a) - அளவில் மிகச் சிறிய, பற்றாக் குறையான.
exile (n)- நாடுகடத்தல், நெடு நாள் அயல்நாட்டில் தங்கி இருத்தல், நாடுகடத்தப்பட்டவர், (V)- நாடுகடத்து.