பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

extant

193

extract


 extant (a)- இன்னும் இருக்கும்.
extemporaneous, extempore (a) -ஆயத்தமின்றிப் பேசும் செய்யும் extempore speech - ஆயத்தமிலாப் பேச்சு. extemporize (v)- ஆயத்தமின்றிப்பேசு. extemporization (n) -ஆயத்தமின்றிப் பேசல்.
extend (v) -நீட்டு,பரப்பு,விரிவாக்கு. extended family-பரந்த குடும்பம் (ஆப்பிரிக்கா). |extension (n) - விரிவு,கூடுதல், கூடுதல் நேரம்,நீட்டல்.extensive (a)- பரந்த,அகன்ற. extensive view - பரந்த காட்சி. அளவில் பெரிய, அகன்ற எல்லையுள்ள extensively (adv).
extent (n) - நீளம், பரப்பு, எல்லை.
extenuate (n) - குற்றந்தணி,குற்றங்குறை, (சாக்குபோக்கு சொல்லி) தண்டனை குறை. extenuation (n) - குற்றங்குறைத்தல்.
exterior (a) - வெளிப்புற(n) -வெளிப்புறம்(x interior)
exterminate (v)- வேருடன் அழி.extermination (n) - வேருடன் அழித்தல் exterminator (n) - வேருடன் அழிப்பவர்.
external (a) - புற (x internal) externals (n) - புற இயல்புகள். தோற்றங்கள், externalize (v) - புறம்பாக்கு.externally (adv) external evidence - புறச்சான்று
external examination - புறத் தேர்வு.external examiner - புறத்தேர்வாளர்.

extinct (a) - அழிந்து போன,அற்றுப்போன, ஒய்ந்த,அவிந்த, extinction (n) -அழிதல்,அற்றுப்போதல், ஒய்தல், அவிதல்.
extinguish (n} - அணை,கழி,நீக்கு,கடன் தீர். extinguisher (n) - தீயணைக்கும் கருவி.
extol(v)- புகழ்ந்துபேசு.
extort (v)- கைப்பற்று, பிடுங்கு, அச்சுறுத்திப் பெறு. extortion (n) - அச்சுறுத்திப் பெறல். extortioner (n) - அச்சுறுத்திப் பெறுபவர். extortionate (a)-கடும் (விலை).
extortionately (adv) - கடும் விலையுள்ள.
extra (a) - கூடுதல்,extra pay-கூடுதல் ஊதியம். (adv). கூடுதலாக(n)-கூடுதல் பொருள், கூடுதல் நடிகர்நடிகை (சிறுபகுதிநடிக்க). சிறப்புப் பதிப்பு செய்தித்தாள். late night extra - பின்னிரவு சிறப்புச் பதிப்பு. மறைமுகக் கெலிப்புப்புள்ளி (மரப்பந்தாட்டம்).
extract (n) - பிழிவு,சாறு,சுருக்கம், பொறுக்குமணி.
extract (v) - பிரித்தெடு,கழற்று,வற்புறுத்திப் பெறு (செய்தி) நன்கொடை, பொறுக்கி எடு. extraction (n) - பிரித்தெடுத்தல், பிடுங்கல் (பல்),பெறுதல்,மரபுவழி. extractor (n)- பிழிவி, பிழிந்தெடுப்பவர் extractor fan - காற்றுப் போக்கும் விசிறி.