பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

allotropy

17

also


allotropy (n) - புற வேற்றுமை, அயல் வேற்றுருமை. allotrope (n) - அயல் வேற்றுரு
allow (w) அனுமதி, ஒப்புக் கொள், இணங்கு அளி.allowable (a), allowance (n) - இணக்கம், செலவுப்படி, வாழ்க்கைப்படி, தள்ளுபடி, கருத்தில் கொள்ளல்.
alloy (v) . உலோகங்களைச் சேர், நலிவாக்கு. alloy (n) - உலோகக்கலவை.
allude (v) - சுட்டு,குறி.allusion (n)- மறை முகக் குறிப்பு (செய்யுள்). allusive (a).
allure (v) - கவர்.allure (n) -கவர்ச்சி. allurement (n), alluring (a).
alluvium (n)-வண்டல் மண், alluvial (a).
ally (V)-நட்புறவாக்கு. (n) நட்புறவு நாடு. allied (a)-ஒத்த.the allies:முதல், இரண்டாம் உலகப் போர்களில் பிரிட்டனுடன் சேர்ந்து போரிட்ட நாடுகள்.நட்பு நாடுகள்.
Alma Mater (n)-பயின்ற பள்ளி,கல்லூரி.
almanac (n) - ஐந்தொகுதி, நாள் கோள்குறிப்பு, ஆண்டுக்குறிப்பு.
almighty (a) -எல்லாம் வல்ல,மிகப் பெரிய. the Almighty - கடவுள்.
almond (n) -வாதுமை மரம்,கொட்டை.almond-eyed (a) - குறுகிய முட்டை வடிவக்கண்கள் உள்ள.almond paste-வாதுமைப்பசை, almoner (n) - ஈதல் மனை அலுவலர்,சமூகப் பணியாளர்.almonry (n) - ஈதல் மனை.
almost (adv) -கிட்டத்தட்ட,பெரும்பாலும்.
alms (adv) -ஐயம்,பிச்சை.alms house (n) - இரவலர்ச் சாலை.
aloe (n) - கற்றாழை.aloes (n) -கற்றாழைச் சாறு.
aloft (adv,a) -மிக உயரத்தில்,தளத்திற்கு மேல் (கப்பல்).
alone(adv) -தனியாக.
along (adv.prep)-நெடுக,கூட,முன்னோக்கி, பக்கத்தில்.
alongside (adv) -பக்கத்திற்குப் பக்கமாக.
aloof (adv) - தனியே,அக்கறை இல்லாமல். aloofness (n).
aloud (adv) - உரக்க.
alp (n)-மலை முகடு, Alps(n)-ஆல்ப்ஸ் மலை.
alpaca (n) - தென் அமெரிக்க விலங்கு, அதன் மயிர் ஆடை, ஒண்கம்பளிப்பட்டு.
alpha (n) - அகரம் (கிரேக்க நெடுங்கணக்கு).
Alpha and Omega: தொடக்கமும் முடிவும், ஆதியும் அந்தமும.
alphabet system of filing- அகரமுதலிக் கோப்புமுறை
alphabet (n) - நெடுங்கணக்கு, alphabetical (a), alphabetically (adv).
Alpine (a)- ஆல்ப்ஸ் மலை சார்.
Alpinism (n) - மலையேற்றக் கலை.
already (adv) - முன்பே,முன்னரே.
also (adv) -கூட.