பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

anchor

21

annals


 anchor (v) - நங்கூரம் பாய்ச்சு, நிலைக்கச் செய். anchor (n)-நங்கூரம். anchorage (n)- நங்கூரம் பாய்ச்சுமிடம்.
anchorite (n) - துறவி.
ancient(a)-பண்டைய,தொன்மையான.the ancients- பண்டைய காலத்தவர் (உரோமர், கிரேக்கர்). ancient history :பண்டைய வரலாறு.(x modern),
ancillary (a) - துணை. ancillary industries: துணைத் தொழிற்சாலைகள், தொழில்கள்.
and(con)-உம் இணைப்புச் சொல்.
andiron (n) - அடுப்புக் கட்டை விறகு அணைகோல்.
anecdote (n) - கதைத் துணுக்கு.(வாழ்க்கை வரலாறு).
anemometer (n) - காற்றுமானி.
anemone (n) - சாமந்தி.sea-anemone:கடல் சாமந்தி.
aneroid (a) - நீர்மமற்ற aneroid barometer: நீர்மமிலாப் பாரமானி.
anew (adv) - புதிதாக.
angel (n) - அரமகன், மகள், தேவதூதன், தேவதை, அழகுள்ளவர். angelic (a).
anger (n) - சினம்.anger (v) -சினமூட்டு,
angle (n) - கோணம், கருத்துநோக்கு, மூலை.
angle (v) - தூண்டிலிடு, கருத்துக் கூறு, சாய்வாக வை, கேட்டுப் பெறு. angler (n) - தூண்டில்காரன்.
angling(n) - தூண்டில் போட்டு மீன்பிடித்தல்.

Anglican (a,n) - இங்கிலாந்தின் அரசியல் ஏற்புடைய, சமயத்திற்குரிய.Anglicize (v) - ஆங்கிலமயமாக்கு.
Anglophobia (n)-ஆங்கில அச்சம்.
angora(n)-அங்கோரா ஆடு. முயல். இவற்றின் மயிரிலிருந்து செய்யப்படும் இழை.
angry (a)- சினமுள்ள.
anguish (n) - கடுந்துயர்.
angular (a) - கோணமுள்ள. angularity (n)- தனிச் சிறப்புடைய,
anhydrous (a) நீரற்ற.-
anllinie (n) -நீலச்சாயம்.
animadvert (V) -குற்றங்காண்.குறை கூறு.animadversion (n)- குறை கூறல்.
animal (n) - விலங்கு, காட்டான் animal (a), animal husbandry- கால்நடைப் பேணுகை, animalcule(n)- சிற்றுயிர்.
animate (v) - உயர்ப்பி,எழுச்சியூட்டு. animated (a). animated writings: எழுச்சியூட்டும் எழுத்துக்கள். animator (n).
animosity, animus (n)- வெறுப்பு,பகை.
anise (n). பெருஞ்சீரகம், சோம்பு.
ankle (n) -கணுக்கால்.
. anklet (n) -சிலம்பு.
annals(n) வரலாறு, வரலாற்று ஏடு.annalist (n) - வரலாற்று குறிப்பாளர்.