பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

impending

290

impious


impending (a) - நிகழ்வுள்ள.
impenetrable (a) - கடக்க முடியாத, செல்லமுடியாத, புரிந்து கொள்ள அல்லது தீர்க்க இயலாத. impenetrability (n). impenetrably (adv).
impenitent (a) - தவறுக்கு வருந்தாமை. impenitence (n) impenitently (adv).
imperative (a) - மிக இன்றியமையாத, தவிர்க்க முடியாத ஆணை பிறப்பிக்கும். ஏவலைக் குறிக்கும் (இலக்கணம்) (n)- ஏவல் வாக்கியம்; இன்றியமையாப் பொருள். imperatively (adv).
imperceptible (a) -புலப்படாத,மிக நுண்ணிய. imperceptibility (n) - புலப்படாமை, நுண்மை. imperceptibly (adv).
imperfect (a) - நிறைவற்ற,குறைபாடுள்ள.(x perfect). imperfection (n) - நிறைவின்மை, குறைபாடு. imperfectly (adv).
imperial (a) - பேரரசுக்குரிய,மாட்சிமையுள்ள, பெருமிதமுள்ள.imperial (adv). imperialism (n) - பேரரசுக் கொள்கை (நாட்டை விரிவு படுத்தும்) imperialistic (a).
imperil (V) - தீங்குசெய், இடையூறு ஏற்படுத்து.
imperious (a) - இறுமாப்புள்ள,செருக்குள்ள. imperiously (adv).
imperishable (a) - அழுகாத, மங்காத.


impermanent (a) - நிலையிலா,இடைக்கால. impermanence (n)-நிலையிலாமை,(x permanence) .
impermeable (3) - ஊடுருவாத (x permeable).
impermissible (a) - உள்ளிடாத,அனுமதிக்காத (x permissible).
impersonal (a) - மனித உணர்ச்சியற்ற, ஒன்றையும் குறிப்பிடாத புறத்திண்மையுள்ள. impersonally (adv).
impersonate (V) - ஆள் மாறாட்டம் செய், போல நடி.impersonation (n) -ஆள் மாறாட்டம். impersonator (n) - ஆள் மாறாட்டம் செய்பவர், போல தடிப்பவர்.
impertinent (a) - துடுக்கான,முறையற்ற, நாகரிகமில்லாத (x pertinent). impertinence (n) impertinently (adv).
imperturbable (a) - அலட்டிக் கொள்ளாத, அமைதியான. imperturbably (adv).
impervious (a) - ஊடுருவாத,நுழையாத, அசையாத,
impetigo (n) - தொற்றும் தோல் நோய்.
impetuous (a) - கவனமற்றுச் செய்யும். impetuously (adv).
impetus (n) - ஊக்கம்,தூண்டல்.
impious (a) - மரியாதையற்ற, தெய்வபக்தி இல்லாத. (x pious) impiously (adv).impiety (n) .