பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

apiary

25

appertain



apiary (n) - தேனீக்கள் வளர்க்குமிடம். apiculture (n) - தேனி வளர்ப்பு.
apivorous (a) - தேனிக்களைத் தின்னும்.
apiece (adv) - தனித்தனியே.
apocryphal (a). - ஆதாரமில்லாத, போலியான.
apogee (n) - சேய்மை நிலை,உச்சநிலை.(x perigee).
apologue (n) - நீதிக்கதை.
apology (n) - மன்னிப்பு, விளக்கஉரை, நிலைநாட்டு.
apologetic - (a) apologize (v) apologist (n) - கொள்கை நிலைநாட்டுபவர்.
apoplexy (n) - வலிப்புநோய்.apoplectic (a).
apostasy (n) - கொள்கை கைவிடல், கட்சி விடல்.
a posteriori (adv) - காரியத்திலிருந்து காரணத்திற்கு, ஒ. a priori.
apostle (n)- மாணவர், சீடர்,தலைவர் (புது இயக்கம், கொள்கை)
apostrophe (n) - முன்னிலைப் பாட்டணி, எழுத்துக் குறைக் குறியீடு, ஆறாம் வேற்றுமைக் குறி. boys , boys'. apostrophize (v)-
apothecary (n) - மலிவுக் கடைக்காரர்.
apotheosis (n) - மனிதனைத் தெய்வமாக்கல், புகழப்படும் கருத்து, ஒன்றின் உயர் வளர்ச்சி.
appal (V) - திடுக்கிடச் செய்,மலைக்கச்செய்.

apparatus (n) - துணைக்கருவி.
apparel (V) - ஆடை அணிவி.apparel (n) - ஆடை.
apparent (a) - தெளிவாகக் காணப்படும், தோற்ற, வெளிப்படையான, போலியான, apparent depth: தோற்ற ஆழம்(X real). apparently (adv).
apparition (n) - தோற்றம், பேய்,ஆவி.
appeal (V) - மேல் முறையீடு செய், வேண்டு, கவர்ச்சியுள்ளதாய் இரு. appeal to one's mercy, taste. appeal (n), appealing (a) appealing (adv).
appear (v) - தோன்று, காட்சியளி.appearance (n) - தோற்றம்,உருவம்."It appears as if he has lost interest in his job".
appease (V) - தணி (நோய்).அமைதிப்படுத்து.
appellant (n) - மேல் முறையீட்டார் (a) - மேல்முறையீட்டிற்குரியவர், appellate (a)- மேல் முறையீட்டிற்குரிய, appellate authority - மேல் முறையீட்டு அலுவலர்.
appellation (n)- பட்டம்.பெயர்க் குறியீடு, சாட்டுப் பெயர்.
append (V)- இணை. appendix, appendices (n) - பின்னிணைப்பு, குடல்வால், appendicitis (n) குடல் வால் அழற்சி. appendage (n) - ஒட்டுறுப்பு (துதிக்கை).
apperception(n) - முன் புலனறிவு, apperception mass: முன்புலனறிவுத் திரட்சி,
appertain (v) உரியதாய் இரு.