பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

jujube

329

just


jujube (n) - சுவையுள்ள,இழுதுபோன்ற இனிப்பு.
juke-box (n) - பதிவிசை இயக்கும் கருவி (உணவு விடுதி).
julep (n)- மருந்து கலந்த இனியகுடிநீர்.
July (n)- ஜூலைத்திங்கள்: ஆனி 15 முதல் ஆடி 15 வரை.
jumble (n,v) - குழப்பும் வகையில் கல, தாறுமாறாகக் கல.(n) - தாறுமாறான கலவை. jumble sale கலவைப் பொருள் விற்பனை. jumbled Sentences - தாறுமாறாகக் கலந்த வாக்கியங்கள்.
jumbo (a) - மிகப் பெரிய (n) - பெருவிலங்கு (யானை), மிகப்பெரிய வானூர்தி.
jump (V) - குதி,தாண்டு,(n) - குதித்தல், தாண்டல், broad jump - அகலத் தாண்டல்.long jump - நீளத்தாண்டல் jumpy (a)
jumper (n) - வெளிச்சட்டை,குதிப்பவர்.
junction (n) - சந்தி,சந்திப்பு,கூடல்.
juncture (n) - நிலை,கூட்டம்.junction box - சந்திப் பெட்டி.
June (n) - ஜூன் திங்கள். வைகாசி 15 முதல் ஆனி 15 வரை
jungle (n)-காடு,ஒழுங்கற்ற பொருள் தொகுதி, போராட்டக்களம். jungly (a) - jungle fever (n)- நச்சுக்காய்ச்சல்.


junior (a) - இளைய.(n) இளையோர்.junior Clerk - இளநிலை எழுத்தர் junior engineer - இளநிலைப் பொறியர். junior prince- இளைய இளவரசர்.ஒ. senior.
juniper (n) - தேவதாரு மரவகை.
junk (n) - பயனற்ற பொருள்கள், குப்பை. போதை மருந்து, சீனக் கப்பல்.
junket (n) - பிட்டுவகை, இன்ப உலா (அரசுச்செலவு)(v)- களிப்பூட்டு,விருந்தளி.
junkie (n)- போதைமருந்தடிமை.
Junoesque (a) - பேரழகு வாய்ந்த,
junta (n) - வல்லாட்சிக் குழு.
Jupiter (n) - வியாழன் (கோள்).
juridical (a) - சட்ட நடவடிக்கை சார்.
jurisdiction (n) - ஆட்சி எல்லை,சட்டவரம்பு, நீதி ஆணை உரிமை.
jurisprudence (n)- சட்ட இயல்,சட்டத்துறை. jurist (n) - சட்ட இயலார், வல்லுநர். juristic (a).
juror (n) - சான்றாயர்.jury (n) -சான்றாயம். jurybox - சான்றாயர் மேடை. juryman - சான்றாய உறுப்பினர். jury woman - சான்றாய பெண் உறுப்பினர்.
just (a,ady) - நேர்மையான, நியாயமான, நன்கமைந்த,மெதுவான,உரிய.the just - நேர்மையாளர்.justly (adv).