பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

legume

346

lesser


legume - பருப்புக்கனி(உளுந்து). leguminous (a).
leisure (n) - ஓய்வு.leisurely (adv) - ஓய்வான. leisured (a) - ஓய்வுள்ள.leisure centre - மகிழ் மையம். (விளையாட்டு)
leit motiv (n) - தொடர் பாடு பொருள், தொடரியல்பு.
lemming (n) - சுண்டெலி போன்ற விலங்கு.
leman (n) - காதலன்.
lemon (n)-எலுமிச்சை.lemon curd -எலுமிச்சைப் பாலாடைக் கட்டி. lemon Squash - எலுமிச்சைச் சாறு, பிழிவு.lemon squeezer - எலுமிச்சைச் சாறு பிழிவி. lemon tree - எலுமிச்சை மரம். lemon yellow - எலுமிச்சைச் சாறு மஞ்சள், வெளிறிய மஞ்சள்.
lemon sole - உண்ணத்தக்க தட்டை மீன்வகை.
lemur (n) - குரங்கினம் சார்ந்த சிறு விலங்கு நீண்ட வாலுள்ளது (மடகாஸ்கர்)
lend (v) - கடன் கொடு, இரவல் கொடு, அளி.lender(n)-கடன் கொடுப்பவர்.
length (n) - நீளம், தொலை,காலம்.lengthwise (a) - நீள்வாட்டில்.lengthen (v) - நீட்டு.lengthy (a) - நீளமான.
lenient (a) - கடுமையற்ற,கனிவான.(x strict). leniency (n)- கனிவு,கடுமையின்மை. lenitive (a) - நோவு தணிக்கும்.lenity (n) - இளக்காரம், தயவு.

lens (n) - வில்லை (கண்ணாடி).
Lent (n) - கிறித்துவர் நாற்பதுநாள் நோன்பு. இயேசுபெருமான் பாலை கழிநாள் நோன்பு.
lentil (n) - அவரை வகைச் செடியினம்.
lento (a) - மெதுவாகப் பாடும்.
lentoid (a) - வில்லை போன்ற.
Leo (n) - சிம்ம இராசி, வீடு.leonine (a)- சிம்மம் (அரிமா) போன்ற.
leopard(n) - சிறுத்தை, சிறு வேங்கை. leopardess(n) - பெண் சிறுத்தை,
leotard (n) - இறுக்க ஆடை(கழைக்கூத்தாடி).
leper (n) - தொழுநோயாளி, ஒதுக்கப்பட்டவர். leprosy (n) - தொழு நோய்.leper asylum - தொழுநோயாளியகம்.
lesbian (n) - பெண் ஓரினப் புணர்ச்சியாளர். lesbianism (n) - பெண் ஓரினப் புணர்ச்சி. ஒ. homosexual.
lese-majesty (n) - அரசுப்பகை,வரம்பு மீறும் இளையோர் நடத்தை.
lesion (n) - புண், காயம், நைவுப் புண்.
less (a, adv) - comparative of little - குறைந்த.less than - காட்டிலும், குறைந்தது.
lessen (v) - குறை(வலி).
lesser (a) மிகக் குறைந்த, lesser of two evils - இரு தீமைகளில் குறைந்தது.