பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

MDT

380

measuring tape


MDT-Mountain Daylight Time. மலை பகற்பொழுது நேரம், (அமெரிக்கா) மப பொநே.
me (pron) - என்னை, எனக்கு (இரண்டாம் வேற்றமை, பிற வேற்றுமை,
mead (n) - சாராயக் குடிப் பொருள், தேறல்.
meadow (mead) (n) - புல்வெளி. meadowy (a)
meagre (a)- தரத்தில் குறைந்ததும் அளவில் சிறியதுமான, குறைவான, ஒல்லியான. meagrely (adv) - meagre sum - குறைந்த தொகை,
meal (n) - சாப்பாடு,உணவு.(v)-சாப்பிடு. meal-time - உணவு வேளை,நேரம்.meals-on-wheels - நடமாடும் உணவுப் பணி. meal ticket - சாப்பாட்டுச் சீட்டு.
meal (n)- மாவு.mealy (a)- மாவு போன்ற, mealy mouthed - வெளிப்படையாகப் பேச விரும்பாத.
mealie (n) - மக்காச் சோளம்,அதன் கதிர்.
mean (v) (meant) - பொருள் கூறு, கொள், எண்ணு, நினை.
mean (a) - தாழ்வான,இழிந்த, ஏழ்மையான, கஞ்சத்தனமான, சராசரியான, பொதுநிலை யான.
mean (n) - சராசரி,இடைநிலை.
meanie (n) - கஞ்சன்.meanly(adv) meanness (n).


measuring tape

meander (V) - வளைந்து செல்,வளைந்தோடு (ஆறு), அலைந்து திரி, பிதற்று (n) - ஆற்று வளைவு நெளிவு, சுற்றுவழி, meanderingly (adv). meanderings (pl) - வளைந்து வளைந்து செல்லும் வழி, அலைந்து திரிதல்.
meaning (n) - பொருள், நோக்கம். meaningful (a) - பொருள் உள்ள.meaningfully (adv).
meaningless (a) - பொருளற்ற.
means (n) - வழிவகை, பணம், செல்வம். means test - சொத்து நிலை விசாரணை.
mean-time (adv) - இதற்கிடையில்.meanwhile (adv) - அதே சமயத்தில்.
measles (n) - தட்டம்மை.
measly (a) - புறக்கணிக்கத்தக்க அளவுக்குச் சிறிய, மதிப்பில்லாத,
measure (n) - அளவு,படி, தாளம் அளவு கருவி, நடவடிக்கை. measurable (a) - கவனத்துடன் கருதப்பட்ட, மெதுவான ஒழுங்கு சந்தத்துடன்.
measured (a) - கவனத்துடன் கருதப்பட்ட, மெதுவான ஒழுங்கு சந்தத்துடன். measureless (a) - வரம்பற்ற, அளிக்க இயலாத.
measurement (n) - அளவு,அளவீடு.measurement book - அளவுப் பதிவுச் சுவடி.
measuring tape (n) - அளவு நாடா.