பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

meat

381

mediterranean


meat (n) - இறைச்சி, இன்றியமையாப் பகுதி, உணவு. meaty (a)- இறைச்சி போன்று, சிறந்த meatball-கொத்துகறி.
mechanic (n) - விசைப் பொறியர்,கம்மியர். mechanical (a) - எந்திரம் சார், எந்திரம் போன்ற,சிந்தனையன்றி.mechanically (adv). mechanics (n) - விசை இயல், எந்திரவியல். the mechanics - இயங்கு பகுதிகள். இயங்கு முறை திட்டம். mechanism (n) - இயங்கு பகுதிகள் (எந்திரம், உயிரி)இயங்கு அமைப்பு,முறை. mechanistic (a) - பருப்பொருள் கொள்கை சார்
mechanize (V)- எந்திரவயமாக்கு.mechanization (n) - எந்திரவயமாக்கல்.
M Ed - கல்வி முதல்வர்.க.மு.
medal (n) - பதக்கம். medalist (n) - பதக்கம் பெறுபவர்/பெற்றவர்.
medallion (n) - பெரும் பதக்கம்,இது போன்ற அணிமணி.
meddle (v) - குறுக்கிடு, தலையிடு. meddler (n) - குறுக்கிடுபவர். media - மக்கள் தொடர்புக் கருவி, ஊடகம் (தொலைக் காட்சி, வானொலி, செய்தித் தாள்).
mediaeval (a) - வரலாற்றின் இடைக்கால. mediaeval period - இடைக்காலம். mediaevalism (n) - இடைக்கால நிலை.

25


Mediterranean

medial (a) - இடையிலுள்ள, நடுவே,சராசரி அளவுள்ள. medially (adv). median (n) - நடுக் கோடு, நடுப்புள்ளி, நடு எண் (நடுவன்).
mediate (v) - இணக்கம் ஏற்படுத்து, சந்து செய். mediation (n) - இணக்கம் ஏற்படுத்தல். mediator (n) - நடுவர்.
medic (n) - மருத்துவ மாணவர், மருத்துவர். medical (a) - மருத்துவம்சார், பண்டுவம்சார். medical (n)- உடளாய்வு. medically (adv) - medical jurisprudence -மருத்துவச் சட்ட அறிவு. medical stores - மருந்துவக் கடை.
medicament (n) - குணப்படுத்தும் மருந்து. medicate (v) - மருந்துடன் கல,மருந்து கொடு. medicated - மருந்து சேர்ந்த (n) - மருந்து கொடுத்தல்.
medicine (n) - மருந்து,மருத்துவம். medicinal - மருந்து சார்ந்த. medico (n) - மருத்துவ மாணவர்.
mediocre (n) - இரண்டாந்தர,mediocrity (n) - இரண்டாந்தரம்.
meditate (v) - தியானம் செய்,ஆழ்ந்து நினை, திட்டமிடு,கருது.meditation (n) - தியானம்,ஆழ்நினைவு. meditative (a)- தியானஞ்சார். meditatively (adv).
Mediterranean (a) - மையத் தரைக் கடல்சார்