பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

minicab

392

mint


minicab (n) - சிறிய ஊர்தி.
minicomputer (n) - சிறிய கணிப்பொறி ஒ. mainframe,micro computer.
minim - மினிம். நீர்,அளவு அலகு, அரை அள்வு இசைக்குறிப்பு.
minimal (a) -மிகச்சிறிய,minimally (adv), minimize (V) - குறை, சிறுஅளவுக்குச்செய் ஒ. maximize.
minimum (n) - சிறுமம்,கீழ்வரை குறைந்த அளவு. (a) குறைந்த அளவு.minimum temperature - குறைந்த அளவு வெப்ப நிலை.minimum lending rate - மிகக் குறைந்த அளவு வட்டி வீதம்.minimum thermometer - சிறும வெப்ப நிலைமானி minimum wage - மிகக் குறைந்த கூலி.
mining (n) - சுரங்கத்தொழில் mining industry - சுரங்கத் தொழிற்சாலை. mining engineer - சுரங்கப் பொறியர்.
minion (n) - சிற்றாள்;எடுபிடி.
minister (n) - அமைச்சர்,துணைத் தூதுவர், ஆயர். (V) - உதவியளி, பணிசெய். ministerial (a) அமைச்சர் நிலை சார், அலுவலகம் சார். ministerial office - அமைச்சர் பதவி. ministerial service (n) - அலுவலகப்பணித் தொகுதி. Minister of State - சார்அமைச்சர்,

ministrant (a) - உதவும்(சமயப் பணி) (n)- உதவுபவர். ministration (n) - உதவல், கவனித்தல் ஊழியம். ministry (n) - அமைச்சகம், ஆயர் குழாம்.
minnow (n) - மீன்குஞ்சு.
minor (a)- சிறிய. minor operation (n) - சிறிய அறுவை. ஒ. major. இரு சகோதரர்களில் இளைய, சிறு இசைக்குறிப்பிற்குரிய.
minor (n) - வயதுக்கு வராதவர் ஒ.major.
minor planet (n) - சிறுகோள்.
minor suit (n) - சிறுசீட்டுவரிசை (சீட்டாட்டம்).
minority (n) - சிறுபான்மை வயது வரா நிலை.ஒ.majority.minorities - சிறுபான்மையினர்.minority government - சிறுபான்மை அரசு.
minster (n) - பெருந்திருக் கோயில் (இங்கிலாந்து).
minstrel (n) - பாணன், நாடோடிப் பாடகன், பொதுக்கேளிக்கைக் காட்சியளிப்பவர். minstrelsy (n)- பாணர் பாடல்கள்.
mint (n)- நாணயம், அக்கசாலை, நாணயச் சாலை, தங்கசாலை, இனிப்பு, புதினாக்கீரை (v)- நாணயம் அடி, சொல் புனை. mintage (n) - நாணயம் அடிக்கும் தொழில்,சொல்லாக்கம். minty (a).