பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

quantum

512

quatrain


quantum (n) - சிப்பம்(அளவு).
quantum leap - சடுதி முன்னேற்றம்.
quantum jump - சிப்பத் தாவல்.
quantum mechanics - சிப்ப விசை இயல்.
quantum number - சிப்ப எண்.
quantum state - சிப்ப நிலை.
quantum statistics - சிப்பப் புள்ளி இயல்.
quantum theory - சிப்பக் கொள்கை.
quarantine (n) - தொற்றுத் தடுப்பு. (v)- தொற்றுத் தடுப்பில் வை. quarantine flag - தொற்றுத் தடுப்புக் கொடி (கப்பல்).
quark (n) - கருதுகோள்துகள், அடிப்படைத் துகள்.
quarrel (n) - வாய்ச்சண்டை. (V) - இச்சண்டையிடு. quarrelsome (a) - சண்டையிடும்.
quarry (n) - வேட்டை விலங்கு, தேடப்படும் ஆள் பொருள், கல்வெட்டு குழி, (v)- வெட்டிக் கல் எடு,
quarrying (n) - கல்வெட்டி எடுத்தல்.
quart - குவார்ட். நீர்ம அலகு. 1.14லிட்டர்.
quarter (n) - கால்,கால்மணி,மூன்று மாதம். கால்பருவம்,திசை, மாவட்டம், மக்கள், பின்பகுதி (கப்பல்). quarters - இருப்பிடம், குடியிருப்பு:head quarters- தலைமை இடம்.(V) - நான்கு பகுதிகளாகப் பிரி, தங்க இடமளி.


quarter day (n) - கால்பருவ முதல் நாள்.
quarter deck (n) - கப்பல் மேல் தளப்பகுதி.
quarter-final (n) - கால் இறுதி semifinal (n) - அரை இறுதி.
quarter light (n) - சாளர முக்கோணப் பகுதி (ஊர்தி).
quartermaster (n) - பட்டாளப் பண்டகசாலைப் பொறுப்பாளர், குறிகை அலுவலர்(கப்பற்படை)
quarter sessions (n) - கால் பருவ அமர்வு நீதிமன்றம்.
quarterstaff (n) - கம்பம், கழை (போர்க் கருவி).
quarterly (a) - கால்பருவ, காலாண்டு. (n) - காலாண்டு இதழ்.
quartet (n) - நால்வர் இசை, நால்வர், நான்கு பொருள்கள்.
quarto (n) - கால்மடிப்பு, நான்காக மடித்த அளவு (8 பக்கம்).
quartz (n) - கல்மம், படிக்கல். quartz clock - கல்மக் கடிகாரம். quartz lamp -கல்ம விளக்கு.
quasar (n) - தோற்ற விண்மீன்கள், குவாசி ஸ்டெல்லார் ஆப்ஜக்ட் என்பதின் சுருக்கம்.
quash (v) - தள்ளுபடி செய்,ஒடுக்கு.
quater-centenary (n) - நானூறாண்டு விழா.
quatrain (n) - நாலடிச் செய்யுள்,நாலடியார்.