பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rack

516

radio-astronomy


rack (n) - அடுக்குநிலை; பற் சட்டம், சித்ரவதைக் கருவி. (V) - சித்ரவதை செய், துன்பமுண்டாக்கு (காய்ச்சல்).
rack-railway - பற்சக்கர இருப்புவழி. (மலைச்சரிவு).
rack-rent . அத்துமீறிய வாடகை,
racket (n) - பந்துமட்டை, அமளி, நேர்மையற்ற முறையில் பணம் பெறுதல், தொழில்.(v)-இரைச்சலிட்டுச் செல், கட்டற்ற சமூகச் செயல்களில் ஈடுபடு.
racket-press - பந்து மட்டைச் சட்டம்.
racketeer (n) - நேர்மையற்ற முறையில் பணம் பறிப்பவன்.racketeering (n) - இம்முறையில் பணம் பறித்தல்,
rackety (a) - இரைச்சலுள்ள,ஆரவாரமுள்ள.
racy (a) - ஊக்கமுள்ள, எழுச்சியூட்டும் (பேச்சு), நாகரிகமற்ற.
radar (n) - ரேடார்,வானொலியால் இடமறிதலும், எல்லை காணலும். மின்னனுக் கருவியமைப்பு.
radar trap - ரேடார் கண்ணி(போக்குவரத்துக் கண்காணிப்பு)
radial (a) - ஆரம் போன்ற, கதிர்கள் போன்று அமைந்த. (n), - ஆரமுறையமைந்த டயர் (கட்டு). radially (adv) - radial symmetry - ஆரச்சமச்சீர் ஒ. lateral.


radiant (a) - கதிர் வீசும்(பகலவன்) ஒளிர்வான (கண்கள்), ஆற்றல் வீசும் (வெப்பம்). radiance - கதிர் வீச்சு.radiantly (adv).
radiate (v) - கதிர் வீசு (ஒளி,வெப்பம்), உணர்ச்சியை வெளிப்படுத்து, ஆரம் போன்று பரவு. radiation (n) - கதிர் வீசும் பொருள். radiation belts - கதிர் வீச்சு வளையங்கள். radiation sickness (n) - கதிர்வீச்சு நோய்.
radiator (n) - வெப்பக் கதிர் வீசி (அறை), வெப்ப எந்திரக் குளிர் கருவியமைப்பு.
radical (a) - வேர்வரு, அடிப்படையான, முழுதுமான, புரட்சிவிரும்பும். radical (n)- புரட்சிக் கருத்தாளர், சமத்தொடு கோடு (கண) படி மூலி (வேதி).
radicalism (n)- புரட்சிக் கருத்துடைமை. radically (adv).
radicle (n)- முளைவேர்.ஒ.plumule.
radio (n) - வானொலி, ஒளி பரப்பு, கதிர் அல்லது கதிர் வீச்சு. (v) - வானொலி (மின்காந்த அலை) மூலம் செய்தியனுப்பு. radioactive (a) - கதிரியக்கமுள்ள.
radioactive element (n) -கதிரியக்கத் தனிமம்.
radioactivity (n)- கதிரியக்கம்.
radio-astronomy (n) - கதிரிய வானியல்.