பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rest

540

resurface


rest (v) - ஒய்வுகொள், தங்கு, அமைதிகொள், அசையாமல் இரு,முடி. resting place - கல்லறை, இடுகாடு.
rest (n) - ஒய்வு, தாங்கி, மீதி, மற்றவை. restful (a), rest area - சாலை ஒரநிறுத்தம் (ஊர்தி). r. cure-ஒய்வுப் பண்டுவம்.r.day - ஒய்வு நாள். r. home - ஒய்வில்லம். r. house - தங்ககம்.
restart (v) - திரும்பத்தொடங்கு.
restate (v)- திரும்பக்கூறு.
restaurant (n) - உணவகம். restaurant Car(n)- உணவருந்தும் வண்டி. restaurateur (n) - உணவக மேலாளர்.
restitution (n)- திருப்பி கொடுத்தல், ஈடு செய்தல்.
restive (a) - அமைதி இழந்த, அடங்காத. restively (adv).
restless (a) - தொடர்ந்து இயங்கும், அமைதியற்ற, ஓய்வற்ற, தூக்கமற்ற (இரவு). restlessly (adv) restlessness (n).
restock (v) - பொருள்களை மேலும் வாங்கி இருப்பு வை, வழங்குவதற்கு எடு.
restoration (n) - திரும்பப் பெறுதல் (திருடிய பொருள்), பழைய நிலையடைதல் (உடல் நலம்), மீண்டும் பழக்கத்திற்கு வருதல், சிதைவைச் சரி செய்தல், சீரமைப்பு,மாதிரி. the Restoration(n)- கோனாட்சி மீண்டும் நிலவிய காலம். (பிரிட்டன் 1660 சார்லஸ் II மன்னராதல்).


restorative (a) - நலந்தரும் (மருந்து). (n) - நலந்தரும் உணவு, பண்டுவம்.
restore (v) - திருப்பிக் கொடு, பழைய நிலைக்குக் கொண்டு வா,பழுது பார், புதுப்பி. restorer (n)- புதுப்பிப்பவர்.
restrain (V) - அடக்கு,தடு.restraint (n) - அடக்கல், தடை
restrict(v) -வரையறைப்படுத்து,கட்டுப்படுத்து restriction (n)- வரையறை, வரம்பு. restricted (a) - வரையறையுள்ள, வரம்புள்ள. restrictive (a) வரம்பு படுத்தும்.
restrictive clause - வரம்பு படுத்தும் கிளவியம், சென்னையில் வாழும் என் நண்பர்க்ள். restrictive practices - வரம்பு படுத்தும் தொழில்கள்.
restructure (v) - மாற்றியமை.restructuring (n) - மாற்றியமைத்தல்.
result (n) - விளைவு, பயன், முடிவு. examination results - தேர்வு முடிவுகள் வெற்றி, விடை.
result (v)- உண்டாகு, விளைவை ஏற்படுத்து. resultant (n) - விளைபயன், தொகுபயன்,
resume (v) - தொடர், மீண்டும் கொள். (n) - கருத்துச் சுருக்கம், முன்பணிக் குறிப்பு. resumption (n) - மீண்டும் செய்தல்.
resurface (v) - சாலையைப் புதுப்பி, மேற்பரப்புக்கு வா. மீண்டும் தலைகாட்டு.