பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bigamy

49

bison


 bigamy (n) - இரு மனைவி இல்லற வாழ்வு. bigamous (a) bigamist (n) - இரு மனைவி இல்லற வாழ்வுள்ளவர்.
bigot (n) - கொள்கை வெறியர், குருட்டுப் பற்றுள்ளவர்.bigotry (n) bigotted (a).
bigwig (n)- பெரும்புள்ளி.
bike (n)- மிதிவண்டி,விசைஉந்து வண்டி.bike (V).
bilateral (n). இருபக்க, இருகட்சி.
bilateral symmetry - சமச்சீர்.
bile (n) - பித்த நீர், சீற்றம்.bilious(a)
bilingual la)- இருமொழி பேசும்.
bill(n)- அலகு (பறவை), வலைப் பட்டி, சட்ட வரைவு, துண்டறிக்கை.
billet (n,v) - படை வீரர்களுக்கு இடமளி, இடமளித்தல்.
billet doux (n) - காதல் கடிதம்.
billiards (n) - மேடைக் கோல் பந்து.பந்து.
bilion (n) - இலக்கங்கோடி (ஆங்கில நாடு), ஆயிரங் கோடி (அமெரிக்கா).
billow (n)- பேரலை,கடல்,billowy (a).
billy goat (n)- ஆட்டுக் கடா.
bimonthly (a,n) இரு திங்களுக்குரிய, இரு திங்கள் இதழ்.
bin (n)- குதிர், குப்பைத்தொட்டி.
binary digit (n) - ஈரிலக்க எண் (0.1 கணிப்பொறி).
bind (v) - கட்டு, பிணை,கட்டுப்படுத்து.
bind (n) - கட்டுமானம்.binder(n) - கட்டு வேலையாளர்.


binocular (n) - மூக்குக் கண்ணாடி, இருகண் நோக்கி.
biography (n) - வாழ்க்கை வரலாறு. biographical (a) biographer (n) - வாழ்க்கை வரலாறு எழுதுபவர்.
biochemistry- உயர் வேதி இயல்.
biology (n)- உயிரியல்,biological (a), biologist (n) - உயிரியலார்.
bionics (n) - உயிர்ப்பயனியல்,
biopsy (n) - நுணித்தாய்த்தல்(திசு).
bioscope (n) - படக்காட்சி.
biped {n} . இருகால் உயிர்,சேவல்.
birch (n) - மரவகை, பிரம்பு, (V)-பிரம்பினால் அடி.
bird(n) - பறவை, bird sancturary - பறவைப் புகலிடம், எ.கா. வேடந்தாங்கல்.
birth (n) - பிறப்பு, தொடக்கம் (X death).
birth certificate- பிறப்புச் சான்று birth-day -பிறந்த நாள்.
birthright - பிறப்புரிமை.
biscuit (n) - பிஸ்கோத்து, மாச்சில்.
bisect (v) - இருசமக் கூறிடு, bisection (n)-இருசமக் கூறிடல், bisector (n) - இருசம வெட்டி.
bisexual (a) - இருபால் (பூ) ஊமத்தை,
bishop (n) - பேராயர்.
bismuth (n) -நிமிளை,உலோகம்.
bison (n) - காட்டெருமை.