பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

room

551

Rotary Club


room (n) - அறை,இடம்,வாய்ப்பு, நோக்கு (v)- அறையில் தங்கு. roomed (a)- அறையுள்ள. roomer (n) - அறையில் தங்கி இருப்பவர், அறையில். roomful (n) - அறையளவு.
roomy (a) - இடமுள்ள. rooming house - வாடகை அறைகள் உள்ள வீடு.room -mate - அறைத் தோழன். room - service - அறைப் பணி.
roost (n) - பறவைகள் தங்குமிடம் (v) - துங்கக் கிளையில் அமர்.rooster (n) - சேவல்.
root (n) - வேர்,(மரம்,பல்) roots - குடும்ப உறவுகள், அடிப்படை, தலைவாய், வேர்ச் சொல், வர்க்க மூலம்.16 இன் வர்க்க மூலம் 4. rootless(a)-வேரற்ற. root-crop - வேர்ப் பயிர் கேரட், பீட்ருட், குச்சிக் கிழங்கு. root-vegetable - வேர்க் காய்கறி கேரட், பீட்ரூட்.
root - stock (n) - வேர்த் தண்டு, அடிமரத் தண்டு, தண்டுக் கிழங்கு, root (v) - வேர் விடு, நிலை பெறு, அமை, வேருடன் அழி.
rope (n) - கயிறு. (v) - கயிற்றால் கட்டு.பா. coir. rope - send - பொறுமையின் எல்லை. rope-dancing - கயிறு மீது நடத்தல்.
rope-dancer - கயிறு மீது நடப்பவர். rope-ladder - கயிற்று ஏணி.ropery (n)- கயிறு திரிக்கும் தொழில். rope-ways - கயிற்று வழிகள்.

Rotary Club

rosary (n) - தொழுகை மாலை,ஜெபமாலை.
rose (n) - ரோஜா, வன மல்லிகை, ரோஜா நிறம் (இளஞ்சிவப்பு)
rose-bay - பூச்செடி.r.bud - ரோஜா மொட்டு, r.hip - காட்டு, ரோஜாகனி.r. water- பன்னீர். r. window - அணிவேலைப் பாட்டு. வட்டச்சாளரம் r.wood - கருங்காலி மரம்.
roseate (a) - ஆழ் இளஞ்சிவப்புள்ள.
rosemary (n) - நறுமணச் செடி.
rosette (n) - ரோஜா வடிவத் தொங்கல்.
rosin (n) - குங்குலியம்.
roster (n) - பணிமுறைப்பட்டி communal roster (n) - இனச் சுழற்சிப்பட்டி (v) - இப்பட்டியல் அளி.
rostrum (n) - சொற்பொழிவு மேடை, பேச்சு மேடை.
rosy (a) - இளஞ்சிவப்பான, ரோஜாநிற, மிகநம்பிக்கை தரும்.
rot (v) - அழுகு, சிதைவுறு, (n) - அழுகுதல், கெடல், தாவர நோய், ஆட்டுக் கல்லீரல் நோய்
rota (n) - பட்டியல், பட்டி.
rotary (a) - வட்ட இயக்க, சுழல் இயக்க.
Rotary Club - சுழற்கழகம்