பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

scapula

562

scholastic


scapula (n) - தோள்பட்டை எலும்பு, தோள்பட்டையணி. Scapular (a).
scar (n) - தழும்பு, வடு, வருத்தம் (V) - தழும்பு படு, தழும்பு, உண்டாகி ஆறு.
Scarce (a) - குறைவாய் உள்ள,அருகிய,
Scarcity (n) - குறைவு,அருமை. scarcely (adv) - அரிதாக.
scare (v)- அச்சுறுத்து, வெருட்டு. scare-monger (n) - கிலி பரப்புபவர்.
Scare-crow (n) -சோளக் கொல்லை பொம்மை, பூச்சாண்டி, கண் கழிப்பு உருவம்,
scarf (n) - கழுத்துக் குட்டை, மேல் துண்டு, ஆப்புருவ இணைப்பு (v)- பொருத்து Scarf-skin - மென்தோல்.
Scarlet (n) - நல்ல சிவப்பு. Scarlet-fever (n) - நச்சுக் காய்ச்சல்.
scathe (v) - சேதப்படுத்து,ஊறுபடுத்து. (n) - சேதம்,தீங்கு,தேடு காயம். scathing - புண்படுத்தும். scatheless (a).
Scatter (v) - தூவு, சிறு, தெளி. scatterbrain (n) - கவனமற்றவர், தெம்மாடி.
scavenger (n) -தோட்டி,துப்புரவுத் தொழிலாளி. scavange (v) - தோட்டி வேலை செய்
scenario (n) - நாடக மேடைக் குறிப்புகள், திரைப்படக் கதை.


Scene (n) - காட்சி,தோற்றம்.Scenery (n) - திரை ஓவியம், இயற்கைக் காட்சி, scenic (a)-காட்சிக்குரிய.
scent (v) - நறுமணமூட்டு, மோப்பம் பிடி. (n) - மணம்,மோப்பம். scented (a) - மணமூட்டப் பெற்ற
sceptic (a) - ஐயுறவான, சமயப் பற்றற்ற (n) - ஐயுறவாளர். scepticism (n) - ஐயுறவுக் கொள்கை.
sceptre (n) - செங்கோல்,ஆட்சி.sceptred(a).
Schedule (n) - அட்டவணை,பட்டியல், பணி நிரல் (v) - அட்டவணையில் சேர், ஏற்பாடு செய்.
scheduled tribe - அட்டவணைக் குடியினர்.
schema (n) - படம், குறிப்பீடு. schematic (a) - படவடிவ.
scheme,(n)- திட்டம்,ஏற்பாடு. (v) - திட்டமிடு. schemer (n) - திட்டமிடுபவர்.
schism (n) - பிளவு(கட்சி,சமயம்) schismatic (a).
schist (n) - பிளவுப்பாறை.
schizophrenia - உளப்பிறழ்ச்சி schizo (n)-உளப்பிறழ்ச்சியாளர்.
scholar (n) - மாணவர்,படிப்பாளி, உதவிச் சம்பளம் பெற்றுப் படிப்பவர். Scholarly (adv). scholarship (n) - புலமை, உதவிச் சம்பளம்.
scholastic (a) - மாணவருக்குரிய, கலைப் பள்ளிக்குரிய, புலமை மிக்க. Scholasticism (n) - மெய்யறிவியல் கருத்துடைமை.