பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/616

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

subjoin

610

subscribe


subjoin (v) - முடிவில் இணை, பிற்சேர்க்கை யாக அமை.
Sub-judge (n) - துணை நடுவர்.
Sub-judice (a) - வழக்கு முடியாதிருக்கிற,
subjugate (V) - (ஆட்சிக்கு) உட்படுத்து, கீழ்ப்படுத்து. n. subjugation. Subjugator n.
subjunctive (a) - (இலக்) வியங்கோள்.
sublease (n) - உட்குத்தகை.
sublet (v) - கீழ்க் குடிக்கூலியாக விடு.
sublimate (v) - உச்ச மேம்பாடு ஆக்கு, ஒரேயடியாக மாறு, உருகாது ஆவியாகு, நேரடியாகத் திண்பொருளாகு, உறை, படி, புடம்போடு n. படிமானம், உறை பொருள், புடமிட்டது. sublimation n.
sublime (a) - விழுமிய,மதிப்பார்வமுண்டு பண்ணுகிற, வீறமைதியுடைய. n. வீறமைதி நிலை, உயரிய கருத்து. sublimity n.
sub lunar, sub lunary (a) - நிலஉலகு சார்ந்த, இவ்வுலகு சார்ந்த,
sub-magistrate (n)- குற்றவியல் துணை நீதிபதி.
submarine (a) - கடலின் கீழான.n. நீர் மூழ்கிக் (கப்பல்).
submerge (V) - நீரில் மூழ்கு,வெள்ளத்தினால் மூடப்பெறு. submergence, submersion n.


Submit (v) 1. (ஆட்சிக்கு உட்படு, அடங்கு, கீழ்ப்படி, பணி. 2. முன்வை, முன்னிலைப்படுத்து, மேலனுப்பு, அனுப்பிக்கொடு, (1)a. Submissive (2) submission n.
sub-montane (a) - மலைக்கீழதான.
sub-normal (a) - பொதுவான இயல்பில் குறைந்த, இழிந்த, இழிநிலையான, தரங்குறைந்த,
subordinate (a) - கீழ்ப்பட்ட,தணிந்த படியிலுள்ள (பணித் துறையில்) தாழ்ந்த: அடங்கிய, கீழடங்கிய, உட்பட்ட, n. கீழ்ப் பட்ட பணியிலுள்ளவர், இரண்டாந்தரப் பணியாளர், கீழ்ப்படியிலுள்ளவர். v கீழ்ப்படுத்து, அடக்கு.Subordination n.
suborn (v) - உள்ளடக்கு,உடன்தையாக்கு. n. Subornation.
subpoena (n) - முறையின்றி அழைப்பு, v. முறைமன்றத்துக்கு வரக் கட்டளையிடு.
sub-registrar (n) - துணைப் பதிவாளர்.
subscribe (V) - கையொப்பமிடு,கீழ்க் குறிப்பிடு, இணக்கம் தெரிவி, வரியாளாகு, செய்தித் தாள் வரியாளாகப் பணம் செலுத்து, குழு வரி செலுத்து, பங்கு வரி செலுத்து. subscriber n. பங்கு வரியாளர்.