பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sum

614

super add


sum (n) - கூட்டுத்தொகை, மொத்தம், பணத்தொகை, (விடைகண்டறிய வேண்டிய) கணக்கு. v. கூட்டுத்தொகை கண்டுபிடி V. Sum up, சுருக்கமாகக் கூறு.
summary (a) - சுருக்கமான,விரைவில் செய்யப்பட்ட, n. சுருக்கம், பொழிப்பு summarily adv. சட்டென்று,உசாவுதலின்றி, நடைமுறைப் படிகளில்லாமல், மொத்தமாக, Summarize, se v.
summation n (sum) - கூட்டுத் தொகை கண்டு பிடித்தல்.
summer (n) - கோடைக்காலம், முதுவேனில் summer-house n .வேனில் மாளிகை,வேனிலகம்.
summer sault, n. (= somer sault).
summit (n) - உச்சி, பொருட்டு,முகடு.
Summon (V) - வரவழை,முறை மன்றம் வர உத்தரவிடு, (கூட்டத்திற்கு) அழைப்பு அனுப்பு. n. summons. (pl. summonses) முறைமன்ற அழைப்பு.
summum bonum (n)- மிகச்சிறந்த நன்மை, உச்ச அளவு நன்மை.
sumptuous (a) - நிறைவுடைய, குறைவற்ற, முழு உயர்வுடைய sumptuousness n.
sun n. கதிரவன், வெயில் n. வெயிலில் காய வை. Sunny a. ஒளி பிறங்குகிற, உவகையுள்ள. sunniness n.


Sunrise (n) - விடியல் (காலம்).
sunset (n) - கதிரவன் மறைவு.
sunshade (n) - வெயில் தாங்கி, வெயில் மறைப்புத் (திரை), மேல்தட்டி, நிழற்குடை.
sunshine (n) - வெயில்,கதிரொளி.
sunspot (n) - செங்கதிர்க்கறை, (ஞாயிற்றுப் பிழம்பிலுள்ள) கரும்புள்ளி. sunbird (n) - தேன்சிட்டு.
sunburnt (a) - வெயிலினால் கறுத்த.
Sunday (n)- ஞாயிற்றுக் கிழமை.
sunder (v) - இணைப்பை அறு
sundry (a) - பலவகைப்பட்ட,சில்லரையான. n. (pl.) Sundries, சில்லறைப் பொருள்கள், சில்லறைச் செலவுகள்.
sun-flower (n) - சூரிய காந்தி(ச்செடி, மலர்).
sunlight (n) - வெயில்.
sunstroke (n) - கடும் வெயிலால் ஏற்படும் மயக்க நோய்.
sup (v) - கரண்டியிலிருந்து உறிஞ்சு, மாலையுணவு சாப்பிடு. n. ஒருவாய் தேறல். super, (முன்னிணைப்பு விகுதி) மேலான, மிகுதியான, பொது நிலை கடந்த
superabound (v) - ஏராளமாயிரு
superadd (v) - மேலும் மிகுதியாக்கு.