பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1

ablution


A

a(art)-ஒரு(மாணவன்).பா.an,the
aback (adv) - பின்புறமாய். (taken aback-திடுக்கிட்டு)
abactor, n.- கால்நடைத்திருடன்; ஆனிரைக் கள்வன்
abacus (n) - மணிச்சட்டம் (கணக்கிடு கருவி).
abaft (adv) - கப்பல் பின்புறமாக.
abandon (v) - துற; கைவிடு. abandoned (a) - கைவிடப்பட்ட, ஒழுக்கந்தவறிய. abandonment (n) - கைவிடல். abandonment of revenue: வருவாயைக் கைவிடல்.
abase (v)- தாழ்வுபடுத்து, இழிவுபடுத்து. abasement (n) - தாழ்வுபடுத்தல்
abashed (a) - வெட்கப்படும், தலைகுனியும்.
abate (v) - தணியச்செய். abatement (n) - தணிதல்.
abattoir (n) - கால் நடை வெட்டுமிடம்.
Abba (n)- தந்தை, கடவுள்(விவி)
abbess (n) - மடத்தின் தலைவி,அன்னை.
abbey (n) - திருமடம், குருமடம்
abbot (n) - மடத்தின் தலைவர்,தந்தை.
abbreviate (v) - சுருக்கு. abbreviation (n) - சுருக்கம்.
abdicate (V) - அரசுரிமை துற. abdication (n) - அரசுரிமை துறத்தல்.

abdomen (n) - வயிறு. abdominal (a) - வயிறுசார். abdominally (adv).
abduct (v) - கடத்திச்செல் (ஆள்) abduction (n)- கடத்திச்செல்லுதல், abductor (n) - கடத்திச்செல்பவர்.
abeam (adv) - கப்பல் குறுக்காக
aberrant (a) - இயல்பு வழி விலகல். aberration (n)-இயல்பு வழிவிலகல், பிறழ்ச்சி (ஒழுக்கம், விளைவு, அடி, வில்லை, கோள்)
abet (v) - தீச்செயலுக்கு உதவு. abetment (n) தீச்செயலுக்கு உதவுதல், abettor(n)- தீச்செயலுக்கு உதவுபர்.
abeyance (n) - நிறுத்தி வைத்தல்(சட்டம்).
abhor (v) - வெறு, விடு. abhorrence (n), abhorrent (a).
abide (v) - பொறுத்திரு, செயல்படு, தங்கியிரு. abiding(a).
ability (n)-திறமை. skill, talent.
ab initio (adv) - அடிமுதல்.
abject (a)- இழிந்த, கொடிய,abjectly (adv).
abjure (v) - ஆணையிட்டுக்கைவிடு. கொள்கையை மறு. abjuratiôn (n)
ablative (n) - ஐந்தாம் வேற்றுமை.
abaze(a)-கொழுந்துவிட்டு எரியும்
able (a) - திறமையுள்ள. ably (adv)
ablush (adv) - தாணி
ablution (n) - முழுக்கு, நீராட்டு