உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிய ஜோதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. புத்தர் அவதாரம்

இறைவன் தேவர் சபையில் தெரிவித்தல்

"வையகத்தில் உயிர்கள் மிக வாடக் கண்டேன்;
வழியறியாது அவைமயங்கி வருத்தக் கண்டேன்;
மெய்யிது என்று உய்யுதெறி காட்டி தன்மை
வியாவிப்பார் எவரையுமே கண்னற் காணேன்,

1

எண்ணரிய சென்மங்கள் எடுத்து முன்னம்
எவ்வுடம்பின் எவ்வுயிருக்கும் இடர்க ளைந்தேன்;
மண்ணுலகம் ஈடேற இன்னும் ஓர்கால்
மனிதஉடல் தாங்கமனத்து ஆசை கொண்டேன்.

2

இப்பிறப்பை யல்லாது பிறப்பு வேறிங்கு
எனக்குமில்லை; என்னைவழி பட்டு வாழும்
ஒப்பரிய அடியவர்கள் எவர்க்கும் இல்ல;
உண்மைாது எந்தாளும் உண்மை யாமால்.

3

வானெழுந்து வளர் இமய மயிைன் தென்பால்
வாழும்உயர் சாக்கியர் தம் மன்ன னுக்கு
யானுமொரு மகளுகச் செல்வேன்" என்முன்,
இமையவரை நோக்கி அருள் இறைவன் மாதோ!

4

மாயாதேவி கனாக் காணுதல்

வேறு


அந்நாளில் அவ்விரவில் கத்தோத னப்பேர்
அண்ணற்கு வாய்த்தமன் அவர்மங்கை யனையாள்
எந்நாளும் சாணத கனவொன்று கண்டாள்
எந்நாடும் எவ்வுயிரும் இன்புறவே அம்மா!

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/10&oldid=1679526" இலிருந்து மீள்விக்கப்பட்டது