உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிய ஜோதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

________________

                         ஆசிய ஜோதி
                             வேறு 

ஆறு கதிரொளி செய்திடுமீன்-கண்ணுக்கு அற்புதக் காட்சி அளித்திடுமீன் ஏறும் அழகு பொலித்திடுமீன்--திரை எட்டும் ஒளிர ஒனிவிடுமீன், 6

சின்னஞ் சிறுமருப் பாறுளதாய்க்- காம தேனுவின் பால் நிறம் பெற்றுள்ளதாய், மன்னும் மதவேழம் போன்றிடுமீன் -இந்த வையம் ஒளிர ஒளிவிடுமீன், 7

விண்ணகம் விட்டு விரைந்திறங்கி- வரும் வீதி யெலாம் ஒளி வீசிவந்து, மண்ணகம் வாழ வலந்திரித்து-தேவி மாயை வயிற்றில் புகுந்ததுவே, 8

                             வேறு

வலமருங்கில் விண்மீனும் வயிற்றிற் பாய மாதேவி துயிலுணர்த்து மகிழ்ச்சி யுற்றாள்; உலைவறியாத் திருவருளை வியந்து நின்றான்; ஒருதாயுங் கண்டறியா இன்பங் கண்டாள். 9

              உலகில் நன்மை விளைதல்
                      வேறு

சாலைக் கதிரோன் உதிக்குமுன் -ஆசிய கண்ட மெலாம்ஒளி கண்டதுவே; வேலைத் திரைகள் அடங்கினவே-திசை லெற்புகள் நின்றுகத் தாடிாவே. 108. மாயை-மாயாதேவி; புத்தரது அன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/11&oldid=1439954" இலிருந்து மீள்விக்கப்பட்டது