உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிய ஜோதி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

                            பதிப்புரை

ஆசிய ஜோதி என்னும் இக் காவிய நூல், உலகிற்கு வழிகாட்டியாகத் தோன்றிய புத்தர் பெருமானுடைய சரித்திரத்தை வெளியிடுகிறது. புத்தர் பெருமான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நமது பாரத நாட்டில் தோன்றினார்,

               "பூரண ஞானம் பொலிந்தநன் னாடு 
                புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
                பாரத நாடு பழம்பெரும் நாடே" என்ற பாடினார் பாரதியார்.
      புத்தருடைய தியாகமும், அவர் போதித்த அறிவுரைகளும் வெளிநாட்டறிஞர்கள் பலரின் மனத்தைக் கவர்ந்தன. யுவாங்சுவாங் முதலிய சீன அறிஞர்கள் புத்தர் பிறந்த புண்ணிய பூமியைத் தரிசிக்க விரும்பி இங்கு வந்தார்கள்; புத்தருடைய போதனைகளைக் கற்றுத் திரும்பினார்கள். பாரத நாட்டிலிருந்து புத்தமதப் பிரசாரகர்களும் வெளி நாடுகளுக்குச் சென்று பிரசாரம் செய்தார்கள். இவற்றின் பயனாய், புத்தருடைய பெருமை சீனா, ஜப்பான், பர்மா, சயாம், இயங்கை முதலிய வெளிநாடுகள் வரை சென்று பரவியுள்ளது. இன்றைய உலகிலே பௌத்த சமயத்தைப் பின்பற்றும் மக்கள் அறுபது கோடிக்குமேல் உள்ளார்கள்.
         நமது பழந்தமிழ் நூல்களில் புத்தரைப் பற்றியும் பௌத்த சமயத்தைப் பற்றியும் பல குறிப்புக்கள் காணப்படுகின்றன, எனினும், அவற்றைக் கொண்டு நாம் புத்தர் பெருமானுடைய சரிதத்தை முற்றும் அறிந்து கொள்ள
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/7&oldid=1439743" இலிருந்து மீள்விக்கப்பட்டது