பக்கம்:ஆஞ்சநேய புராணம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சொற்குறிப்பு

அங்கனன் - சிவபெருமான்
அஞ்சிலே ஒன்று- ஐம்பூதங்களில் ஒன்றாகிய வாயு
அஞ்சுகரத்தான்- விநாயகர்
அடியார் இடர் நீக்கி - அடியார் துயர் நீக்கும் இராமபிரான்
அமரர்கோன் - இந்திரன்
அரிக்குலத்தரசன் - சுக்ரீவன்
அவனி காவலற்கு - இராமபிரானுக்கு
அள்ளற் பூமகள் - இலக்குமியாகிய சீதாப்பிராட்டி
அன்பனை - இராமபிரானை
அன்பு மனைவி - இராமபிரானின் மனைவி சீதாப்பிராட்டி
ஆழியான் - திருமால்
இளையோன் - இலக்குமணன்
ஊராண்மை - உபகாரியாந்தன்மை
ஐந்தவித்தான் - ஐந்து அவாவினையும் வெறுத்தவன்
கடிகை - சோளிங்கபுரமதில் உள்ள ஆஞ்சநேயர்மலை
காயுங்கதிர் - சூரியன்
சங்குசக்கரத்தான் - திருமால்.
தந்தை - வாயு பகவான்
தனது நாயகன் - இராமபிரான்
தானறப் பெற்றான் - தவமாகிய தன் கருமஞ்செய்தான்
நங்கைநல்லூர் நாயகி - இராஜராஜேஸ்வரி
புவனிநாதன் - இராமபிரான்
பேராண்மை - பெரிய ஆண்தகைமை
பொறிவாயில் - ஐம்பொறிகளின் வாயில்
மாருதி - அனுமன்
வித்தகன் - அறிஞன்
வேத நாயகன் - இராமபிரான்