பக்கம்:ஆடும் தீபம்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பொறி ஆறு:

கனவு

உதயத்தின் செளந்தர்யம் உலகத்தையே சுவர்க்கமாகத்தான் ஆக்கிவிடுகிறது.

இருள் விலகாத வானம். பனி விலகாத பூமி. இவற்றின் மத்தியிலே அருணோதயத்தின் ஜோதிக்கதிர்கள் ஊசலாடுவதைப் பார்க்கும் போது, இயற்கையின் எல்லையற்ற பேரழகிற்கே ஓர் எல்லை ஏற்பட்டு விட்டதைப் போன்ற பிரமை இதயத்தில் ஏற்படுகிறது.

படுக்கையில் படுத்தபடி வைகறையின் இந்த வரம்பு கடந்த வனப்பைக் கண்ட அல்லியின் நெஞ்சம் மகிழ்ச்சியால் துள்ளியது. அதன் அடிவாரத்தில் ஆயிரம் கற்பனைகள் எழுந்தன. .

“சில் லென்று வீசிய இளங்காற்று அவளது உடலின் வழியாகப் புகுந்து, அவளுடைய உள்ளத்தைத் தொட்டது, வீசும் தென்றலின் ஸ்பரிசம் இவ்வளவு மென்மையானதா...?

அல்லியின் விழிகள் ஒருமுறை குதூகலத்தால் மூடித்திறந்தன. திறந்த விழிகள் சிவந்திருந்தன. ஆமாம்; இரவு முழுவதும் அவள் தூங்கவே இல்லை.

அளவுக்கு மீறிய துன்பத்தைப் போலவே, அளவைக் கடந்த இன்பமும் மனத்தின் சாந்தியைக் கெடுத்துத்தான் விடுகிறது. - .