பக்கம்:ஆடும் தீபம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



104

ஆடும்


அல்லிக்கு எப்பொழுதுமே இன்றுபோல இவ்வளவு அழகானதாக உலகம் இருந்ததில்லை. கண்ணில் பட்ட பொருளெல்லாம் காவிய மகத்துவம் பெற்றுவிட்டதாக தோன்றச் செய்யும் இந்தச் சக்தி, காதலைத் தவிர வேறு எதில் இருக்கிறது?

அல்லியின் விழிகள் கிழக்கு வானத்தைச் சந்தித்தன. இப்போது, அங்கு சற்று முன் சிந்திக்கிடந்த இரத்த சிவப்பு இல்லை. மங்கலான வெண்மை- பயத்தால் வெளிறிய முகத்தைப் போல மங்கியதொரு வெளுப்பு அதில பரவியிருந்தது. அந்த சிவப்பைப் போல இந்த வெளுப்பு, அப்படி ஒன்றும் பார்பதற்கு நன்றாகத் தோற்றம் தரவில்லை. இதைக்கண்ட அல்லியின் முகம் ஏனோ திடீரென்று வாடியது. திருப்தியற்ற நினைவுகள் அவளது உள்ளத்தை முற்றுகையிடத் தொடங்கிவிட்டன.

ஒரு விதத்திலே நம்ம அத்தானோட மனசும் இந்த கிழக்கு வானத்தைப்போலத்தானே இருக்கு ஒரு சமயத்திலே சிவப்பு: இன்னொரு நேரததிலே வெளுப்பு; இன்னும் ஒரு வேளையிலே காட்டேரி'யைப்போல கறுப்பு அவுங்க மனசும் கிட்டத்தட்ட இப்படித்தானே இருக்குது?

“அன்னிக்கு ஒரு நாள் டிக்கெட்டுக்காரர். கிட்டே அகப்பட்டுக்கிட்டபோது அவுங்க பேசின சட்டம், போன வாரம் அந்த சாத்தையன் தன்னைப்பத்தி ஏதோ சொன்னதைக் கேட்டுக்கிட்டு உண்மை புரியாம அவுங்க செஞ்ச ஆர்ப்பாட்டம்!... ... அம்மம்மா!... ...’

நடந்ததை இப்போது நினைத்துப் பார்த்தபோது அடி வயிற்றிலிருந்து எழுந்த விம்மலை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள் அல்லி.ஆனால் நெஞ்சிலிருந்து பிரவகிக்கும் நினைவுகளை அவளால் அடக்க முடியவில்லையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/105&oldid=1317202" இலிருந்து மீள்விக்கப்பட்டது