பக்கம்:ஆடும் தீபம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தீபம்

105


நினைவுகளே இப்படித்தான், சனியன்கள்! அவைகள் “வா’ என்றாலும் வருவதில்லை, போ’ என்றாலும் போவதில்லை. இஷ்டப்பட்டால், வருவதும் இஷ்டம் போலப் போவதும் “அடப் பிசாசுகளா!

அன்னிக்கு அந்தச் சிங்கப்பூரு சாத்தானை'க் கண்டுப் பிட்டு மயக்கம்போட்டு விழுந்தவ மறுநாள் சாயந்தரம் தான் கண் விழிச்சுப் பார்த்தேன். என் எதிர்த்தாப்பிலே நின்னுக்கிட்டுஇருந்தாங்க. நான் மயக்கம் தெளிஞ்சதைப் பாத்திட்டு, அவுங்க ஆசையோட பாசமா பேசு வாங்கன்னு நினைச்சு நான் அவுங்களையே ஆவலோடே பார்த்தேன்.ஆனால் அவுங்க என்னைப் பார்த்து உர்’ன்னு மூஞ்சியை வச்சிக்கிட்டு ஏ அல்லி! நான் ஒன்னை கேட்கிற கேள்விக்கெல்லாம் ஒளிக்காம டக் டக் குன்னு பதில் சொல்லணும். ஏதாவது ஒளிச்சியோ, அப்புறம் தெரியும்சேதி ஆமாஞ்சாமி ஆணை’ன்னு பீடிகைபோட்டுக் கிட்டு அவுங்க கேள்விகளைக் கேட்டப்போ, இந்தக் கேள்விகளைக் கேட்கிறதுக்கு முன்னாலே, எனக்கு அவுங்க கையாலேயே ஒரு துளி விஷத்தைக் கொடுத்திருக்கக் கூடாதா?’ன்னுதான் தோணிச்சு.

“என்னென்ன கேள்விங்க?... ... ...? எப்படிப்பட்ட வார்த்தைங்க? இங்கே நீ வர்றதுக்கு முன்னாலே ஊரிலே என்ன செஞ்சிக்கிட்டிருந்தே? உனக்கும் சிங்கப்பூர் சாத்தையாவுக்கும் எத்தனை நாளாத் தொடர்பு? அப்புறம் ஏன் அவனை விட்டுட்டு ஓடியாந்தே?’ன்னுல்லாம் கேட்டு என்னோட உசிரையே கருக வெச்சாங்களே! அதுக்கப்புறம் நான் அவுங்க காலிலே விழுந்து, நடந்த விஷயத்தை எல்லாம் ஒண்னு விடாம் சொல்லி அழுத பிற்பாடு, அவுங்க துடிச்சத் துடிப்பு...!

‘உன்னைப்போயி சந்தேகப்பட்டேனே அல்லி? உண்மையை உனக்கு முன்னமேயே செந்தாமரைசொல்லிச்சு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/106&oldid=1317206" இலிருந்து மீள்விக்கப்பட்டது