பக்கம்:ஆடும் தீபம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



103

ஆடும்


இருந்தாலும் எனக்கு சந்தேகம் நீங்கலே, அதனாலே தான் உன்னேயே கேட்டேன்; தப்பா நினைச்சுக்காதே அல்லி, தயவு செஞ்சு என்னை, மன்னிச்சுக்க அல்லி'ன்னு: அவுங்க கெஞ்சின கெஞ்சல் பாவம், அதைப் பாத்தப்போ எனக்கே கூட மனசு கஷ்டமாகத்தான் இருந்துச்சு .

“அன்புள்ள இடத்திலேதான் ஆத்திரமும் இருக்கும்! என் மேலே அவுங்களுக்கு அவ்வளவு பிரியம்இல்லேன்ன, எதுக்காக இந்தசிங்கப்பூர்க்காரன்சொன்னதைக் கேட்டுப் புட்டு அவ்வளவு துடிதுடிக்கணும்?கடைசியிலே,உண்மை புரிஞ்சதுக்கப்புறம் என்னோட முகத்தை நிமிர்த்தி ‘கண்ணுல்லே இதுக்காகவா அழுகிறது? யாரு கோவிச்சுக்கிட்டது.! உனக்குச் சொந்தமானவன்தானே? அதுக்காக இப்படிக் கண்ணுலே தண்ணி விடலாமா? எங்கே, என்னைப் பாத்துக் கொஞ்சம் சிரி; கொஞ்சம்! ம்... ... இன்னும் கொஞ்சம் ...! ன்னு அவுங்க கொஞ்சின. கொஞ்சல், இருந்தாலும் அவுங்களுக்குக் கொஞ்சம் கூட வெட்கமே இல்லை; பாவம், அத்தான்!”

பாசத்தின் உணர்வுகள் பச்சாதாபத்தினால் பதை பதைத்தன.

அல்லியின் கடை விழிகளில் லேசாக நீர் தேங்கியிருந்தது. அது என்ன, ஆனந்தக் கண்ணீரா? ஆமாம், அப்படித்தான் இருக்கும்!

தாயத்தின் துடிப்புக்களை தாளமாகக் கொண்டு மீண்டும் நினைவுகள் இசைபாடத் துவங்கின.

‘என்ன இருந்தாலும் அவுங்களுக்கு இவ்வளவு கோபமும் முரட்டுத்தனமும் இருக்கக் கூடாது. இஷ்டப்படி பேசுறதும் கட்டுப்பாடு இல்லாமல் நாலு பேர் நாலு: சொல்லும்படியா நடக்கிறதும். இருக்கட்டும் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/107&oldid=1317214" இலிருந்து மீள்விக்கப்பட்டது