பக்கம்:ஆடும் தீபம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தீபம்

107


கழுத்திலே தாலி ஏறட்டும். பிறகு நான் சொன்னபடி தான் அவுங்க நடக்கணும். இதுபோல, கண்டபடி'காளை” மாதிரி சுத்தறதுங்கிற பேச்சு. அதுக்கப்பாலே இந்த அல்லிக்கிட்டே நடக்காது.” இனம் புரியாத நம்பிக்கையும் பலமும் அவளதுசோர்ந்து கிடந்த மனசை நிமிர்த்திவிட்டன. அவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். அவளது விழிகள் வெளிவானின் விளிம்பு கட்குத் தாவின. அந்தப் பார்வையில் மகத்தானதோர் புதிய பொறுப்பினை ஏற்கப் போகிறோம் என்ற பெருமிதம் மட்டுமா இருந்தது? இல்லை; பாவத்தின் பாதங்களில் சுருண்டு கிடக்கும் ஒர் ஆத்மாவைத் தூக்கி நிமிர்த்தப் போகிறோம், என்ற நிறைவும், இருண்டு கிடக்கும் ஒரு வாழ்க்கைக்கு ஒளி ஊட்டப் போகிறோம்’ என்ற நிம்மதியும் கூடத்தான் சுடர் விட்டன.

அருணாசலத்தின் இருட்டிப் போன வாழ்வில் ஒளி ஏற்ற வந்த அழகுத் தீபமா அல்லி? ஆமாம். அவள் அப்படித்தான் நினைத்தாள்.

அருணாசலத்தின் பாலைவன உள்ளத்தில் வசந்தத்தைப் பரப்ப வந்த தெய்வமா அல்லி...? ஆமாம். அல்லி அப்படித்தான் கருதினாள். அருணாசலத்தின் பொய்மை சூழ் வாழ்விற்குப் புது ரத்தம் பாய்ச்சவந்த சத்தியதேவதை'யா அல்லி... ...?

ஆமாம், ஆமாம்! அல்லியின் மனக் குரலில் இந்த எண்ணங்கள் தாம் ஒலித்துக் கொண்டிருக்கின்றன!

அழகுத் தீபத்தின் அற்புதச் சுடரை காலமெனும் புயற்காற்று அசைக்கலாம். ஆனால், அந்தப் புனிதச் சுடரை அதனால் அணைத்து விட முடியாது.எந்தப் புயலுக்கு நடுவிலும் அந்தப் புனித தீபம்-அழகுத் தீபம்-ஆடும் தீப’ மாக நின்று ஒளி வீசிக்கொண்டே இருக்கும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/108&oldid=1317220" இலிருந்து மீள்விக்கப்பட்டது