பக்கம்:ஆடும் தீபம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வைக்கும் சரித்திரச் செப்பிடு வித்தை தெரியாத சாதாரண மனிதன். உண்மையான மரியாதைக்குத் தடபுடலான பாஷை கிடையாது. உண்மை குழைந்து, உணர்ச்சி தெளிந்து, உடலம் குளிர்ந்து போய் நிற்கும் ஒரு மோன நிலைதான் மரியாதைக்குச் செலுத்தும் உயரிய வணக்கமாகும். சோழத்திற்கு நான் உயரிய வணக்கம் செலுத்த விரும்புகிறேன். அதனால் ஊமையாகத்தானே நிற்க வேண்டும்? என் ஊமைத்தனத்தைப் போக்க நானும் முயன்றேன். அண்ணா உமாபதியும், தோழர் ‘பூவை'யும் முயன்றனர். எங்களைப் போன்ற எழுத்தாள அன்பர் சிலரும் முயன்றனர். முயற்சி திருவினையாக்கிற்று. இன்றையச் சோழத்தின் உள் வாசலிலே கோலமாக இழைத்திருக்கும் ஒரு சிற்றுரை எடுத்துக்கொள்வதாகத் தீர்மானித்தோம் பழங்காலச் சோழத்திற்குப் பக்தி செலுத்துவதற்காக ஊமையாக நிற்கும் நான் , இன்றையச் சோழத்திற்காகத் தோழமையுடன் வாய் திறந்து பேசமுடியும். என் வாயைக் கிளறிவிட்டுப் பின்னர் பேசவிருக்கும் அன்பர்கள் புகழ் வளர்ந்த எழுத்தாளர்கள்: பண்பால் உயர்ந்தவர்கள். எல்லோருமாகச் சேர்ந்துதீபம் ஒன்றைஆக்கினோம். அதைச் சோழமண்ணில் ஏற்றி வைக்கும் பணியை எனக்கிட்டனர். அதை ஆட்டிவைக்கும் பணியை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். பூவை'யின் பொறுப்பு என்னவென்பதை இப்பொழுதே நான்சொல்ல மாட்டேன். அது சஸ்பென்ஸ் .

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்: நாங்கள் சேதுவில் பாலம் அமைக்கிறோம். எங்கள் ஒவ்வொரு வருடைய முயற்சியும் அணில் முயற்சிதான். பாலம் ஒழுங்காக அமைந்துவிட்டால், அணிலைப்பாராட்டாதீர்கள் அமைப்பைப் பாராட்டுங்கள்.

வாசவன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/11&oldid=1390035" இலிருந்து மீள்விக்கப்பட்டது